Today News
today hot topic..
ரோகித் சர்மா புதிய சாதனை பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய
போட்டியில், மும்பை கேப்டன் ரோகித் புதிய சாதனை படைத்தார். இப்போட்டியில், அவர் 3வது சிக்ஸர் பறக்கவிட்ட போது, ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள்(250) அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பெற்றார்.
ஒட்டு மொத்தமாக ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்தார். கெய்ல் (357 சிக்ஸர்கள்) முதலிடத்திலும், டிவில்லியர்ஸ் (251) அடுத்த இடத்திலும் உள்ளனர்.
மிரட்டல் விடுத்த நபர் கைது! பிரதமர் மோடி மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் மோடிக்கு மிரட்டல் விடுத்த மர்ம கடிதம் பரபரப்பு ஏற்படுத்தியது. இது பற்றி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டபோது, சேவியர் என்பவர் அந்த கடிதத்தை எழுதியதும், அதனை அவருக்கு பிடிக்காத அண்டை வீட்டுக்காரரான ஜானியின் பெயரில் அனுப்பியதும் தெரியவந்துள்ளது.
ஷிண்டே அரசு 20 நாளில் கவிழும்
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு இன்னும் 15-20 நாட்களில் கவிழ்ந்துவிடும் என சிவசேனா (உ.அ) MP சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், 'பால்தாக்கரேவின் ஆன்மாவிற்கு துரோகம் செய்த தற்போதைய முதல்வர் மற்றும் அவரது 39 MLAக்களின் ஆட்சி முடிவிற்கு வருகிறது. அரசுக்கு மரண தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் யார் கையெழுத்திடுவது என முடிவு செய்யப் பட்டுள்ளது' என்றார்.
Comments
Post a Comment