தமிழக நிகழ்வுகள்.
இன்று உங்கள் பார்வைக்கு.
<<<<<<<<<<💥💥💥>>>>>>>>>>
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஒரிஜினல் ஆடியோவும் உள்ளது- அண்ணாமலை பரபரப்பு பேட்டி.
சென்னை:
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஒரிஜினல் ஆடியோவும் உள்ளது- அண்ணாமலை பரபரப்பு பேட்டி.
கலைஞர் டி.வி.யில் கனிமொழி பங்குதாரர் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.
வழக்கு கோர்ட்டுக்கு வரட்டும். கோர்ட்டில் சொல்வதற்கு இன்னும் பல விஷயங்கள் உள்ளன.
சென்னை:
சென்னை நடுக்குப்பத்தில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான மன நிலையை வாக்குகளாக மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க.வும் உள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளை கைப்பற்றுவதுதான் எங்கள் இலக்கு.
தி.மு.க.வினர் மீது நான் சொத்துப் பட்டியல் வெளியிட்டதற்காக கனிமொழி எம்.பி. நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் அவர் கலைஞர் தொலைக்காட்சியில் தான் பங்குதாரர் இல்லை என்று குறிப்பிடவில்லை. சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்ததாகவும், அதன்பிறகு பங்குகளை விற்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது அவர் பங்குதாரராக இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். பங்குகளை விற்றிருந்தால் அந்த பணம் எங்கே போனது? ஒவ்வொருவரின் சொத்து மதிப்புதான் எனது குற்றச்சாட்டு.
நிதிஅமைச்சர் பழனி வேல் தியாகராஜனின் ஆடியோ என்பது அவர் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம். இந்த விஷயத்தில் அவர் குற்றவாளி இல்லை. என்ன நடக்கிறது என்பதைத்தான் தெரிவித்து இருக்கிறார். வழக்கு கோர்ட்டுக்கு போகும்போது அவர் பேசிய ஒரிஜினல் ஆடியோவையும், எங்கே, எப்போது, யாரிடம் பேசப்பட்டது என்பதையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்.
கட்சியின் தலைவர் பதவியில் இருக்கும் எனக்கு, எனக்கான பாதையை அமித்ஷா, நட்டா ஆகியோர் ஏற்கனவே வகுத்து தந்துவிட்டார்கள். இப்படித்தான் நீங்கள் செயல்பட வேண்டும் என்று அவர்கள் கொடுத்த அறிவுரைகளை ஏற்பது தான் எனது வேலை.
மெட்ரோ ரெயில் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. யிடம் நான் புகார் கொடுத்து உள்ளேன். ஜி ஸ்கொயர் சோதனைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த நிறுவனம் பற்றி நான் புகார் அளிக்கவும் இல்லை. 6 நாட்கள் சோதனை நடந்ததில் இருந்து ஏதோ பெரிய விஷயம் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.2010 கோடி சொத்து மதிப்பு என்று நான் தெரிவித்ததை அவர் இல்லை என்று மறுத்து உள்ளார். ஒருவேளை நமது சொத்து மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடியாச்சே. ரூ.2000 கோடி என்று குறைத்து சொல்லிவிட்டாரே என்று வருத்தப்படுகிறாரோ என்னவோ? வழக்கு கோர்ட்டுக்கு வரட்டும். கோர்ட்டில் சொல்வதற்கு இன்னும் பல விஷயங்கள் உள்ளன.
நான் சொத்து மதிப்புகளை வங்கி ஸ்டேட்மெண்டுடன் வெளியிட்டுவிட்டேன். தி.மு.க. -வினர் குறைந்தபட்சம் ஒருமாத ஸ்டேட்மெண்டை வெளியிட்டுவிட்டு பேசட்டும் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
'மனதின் குரல்' நிகழ்ச்சியில் 1000 பேருக்கு மீன் சாப்பாடு விருந்து- அண்ணாமலையும் பொதுமக்களுடன் சாப்பிட்டார்.
மெரினா நடுக்குப்பத்தில் பிரதமரின் நிகழ்ச்சியை பொதுமக்கள் நேரில் கண்டுகளிக்க பிரமாண்ட பந்தல் போடப்பட்டு எல்.இ.டி. திரையும் அமைக்கப் -பட்டிருந்தது. பா.ஜனதாவை சேர்ந்த பெண்கள் அதிகாலையிலேயே சமையலில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை பா.ஜனதாவினர் இன்று திருவிழா போல் கொண்டாடினார்கள்.
சென்னை மெரினா நடுக்குப்பத்தில் பிரதமரின் நிகழ்ச்சியை பொதுமக்கள் நேரில் கண்டுகளிக்க பிரமாண்ட பந்தல் போடப்பட்டு எல்.இ.டி. திரையும் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் மீன் சாப்பாடு விருந்து அளிக்கப்பட்டது. இதற்காக பா.ஜனதாவை சேர்ந்த பெண்கள் அதிகாலையிலேயே சமையலில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு மீன் உணவகம் என்ற பெயரில் சிறிய உணவகத்தை தொடங்கினார். அதுவும் கொரோனாவுடன் மூடப்பட்டது. வாழ்க்கையோடு போராடினாலும் கட்சிக்காகவும் போராடும் இந்த தம்பதி இன்று விருந்துக்கும் சமையல்காரர்கள் யாரையும் அழைக்கவில்லை. 25-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து சமையலில் ஈடுபட்டார்கள். மீன்களை கழுவி சுத்தப்படுத்துதல், உணவு தயாரித்தல் என்று உணவு கூடமே பெண்கள் கைவண்ணத்தில் களை கட்டியது.
மீன் விருந்து பற்றி சுபசித்ரா கூறியதாவது:-
தாமரை சொந்தங்களுக்கு என் கையினால் சமைத்து விருந்து கொடுக்க ஆசை. எனவே சமையல்காரர்களை அழைக்கவில்லை. நாங்களே செய்கிறோம். நண்டு சூப், இறால் தொக்கு, வஞ்சிரம் வறுவல், பாறை மீன் குழம்பு தயார் செய்துள்ளோம் என்றார்.
விருந்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, சுதாகர் ரெட்டி, நடிகை நமீதா, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கரு.நாகராஜன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகளும் பொதுமக்களுடன் அமர்ந்து விருந்தை ருசித்து சாப்பிட்டனர். சூப், வறுவல், தொக்கு எல்லாவற்றையும் ரசித்து சாப்பிட்டனர். சுமார் 1000 பேருக்கு விருந்து வழங்கப்பட்டது.
சென்னை:
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 28ம் தேதி ரிலீஸானது.
மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரித்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இரண்டு நாட்களில் பொன்னியின் செல்வன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
லைகாவின் இந்த அபிஸியல் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் விரக்தியுடன் ட்ரோல் செய்து வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் 2-100 கோடி வசூல்
கோலிவுட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பொன்னியின் செல்வன் 2ம் பாகம் 28ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியாகி 500 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது. இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், முதல் பாகத்தை விடவும் பொன்னியின் செல்வன் 2-க்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்தே காணப்படுகிறது. லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பார்ட் 1, முதல் நாளில் 80 கோடி வசூலித்திருந்தது. ஆனால், இரண்டாம் பாகம் முதல் நாளில் 60 கோடி மட்டுமே கலெக்ஷன் செய்தது. அதேபோல், இரண்டாம் நாளில் இன்னும் குறைவாக 40 கோடி மட்டுமே வசூலித்தது.
ஆனாலும், லைகா தரப்பில் இருந்து அபிஸியலாக எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தற்போது பாக்ஸ் ஆபிஸ் குறித்து அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி முதல் இரண்டு நாட்களில் 100 கோடி வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் பார்ட் 1 வசூலை முதல் நாளே அறிவித்த லைகா, இரண்டாம் பாகத்தின் கலெக்ஷன் குறைந்ததால், லேட்டாகவே அப்டேட் கொடுத்துள்ளது.
பொன்னியின் செல்வன் 2-வை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்... மணிரத்னம் போட்ட மாஸ்டர் பிளான்
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபிஸ் பற்றிய அபிஸியல் அப்டேட்டை, அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அஜித்தின் ஏகே 62 படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. துணிவு ரிலீஸாகும் முன்பே ஏகே 62 குறித்து அறிவித்திருந்தது லைகா. ஆனால், அதற்கு அடுத்த அப்டேட்டை இன்னும் வெளியிடாமல் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறது லைகா.
இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள், பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்டை இப்போது யார் கேட்டார்கள். நாளை அஜித்தின் பிறந்தநாள் என்ற நிலையில், இன்னும் ஏகே 62 அப்டேட்டை ஏன் வெளியிடவில்லை என டிவிட்டரில் விளாசி வருகின்றனர். ஆனால், அஜித்தின் பிறந்தநாளுக்கு கண்டிப்பாக ஏகே 62 அப்டேட் வெளியாகும் என லைகா தரப்பில் சொல்லப்படுகிறது. அஜித்தின் மோஷன் போஸ்டர், டைட்டில் என இரண்டு அப்டேட்கள் வெளியாகவுள்ளதாம்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 முதல் நாளில் 65 கோடி வரையும், இரண்டாம் நாளில் 45 கோடி ரூபாய் வரையும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் பொன்னியின் செல்வன் 2 ஒட்டுமொத்தமாக முதல் இரண்டு நாட்களில் 110 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை ஒப்பிடும் போது, இரண்டாம் பாகத்தின் வசூல் ரொம்பவே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் :
மாநில செய்திகள்
மது வாங்கித் தராததால், சமையல் செய்ய மறுத்த மனைவி...! கோபத்தில் கணவன் செய்த காரியம்..!
கும்முடிப்பூண்டி அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தனக்கு மது வாங்கித்தரவில்லை எனக்கூறி தகராறில் ஈடுபட்டதால் கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மது வாங்கித் தராததால், சமையல் செய்ய மறுத்த மனைவி...! கோபத்தில் கணவன் செய்த காரியம்..!
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே கரடிபுத்தூரில் உள்ள தனியார் மாந்தோப்பு ஒன்றில் லட்சுமி என்பவர் கொன்று புதைக்கப்பட்டது 27ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது கணவர் தர்மய்யாவை, ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், லட்சுமியும் தர்மய்யாவும் இணைந்து மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், கடந்த 22ஆம் தேதி லட்சுமிக்கு மது வாங்கித் தராததால், ஆத்திரத்தில் அடுத்தநாள் சமையல் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால், சண்டை போட்ட போது, பூச்சி மருந்து குடித்துவிட்டதாக கூறியதாகவும், அடிக்கடி பூச்சி மருந்து குடித்து விட்டு பிரச்சினை செய்ததால் ஆத்திரத்தில் மண்வெட்டியாக் தாக்கி கொலை செய்து புதைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து தர்மய்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.
மெரினா கடற்கரை, பேனா கடற்கரை என மாறிவிடும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்...
பேனா நினைவு சின்னம் அமைந்தால், மெரினா என்ற அடையாளம் போய் பேனா கடற்கரை என மாறிவிடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை ஓட்டேரியில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
மெரினா கடற்கரை உலக பிரசித்தி பெற்றது. உலகிலே மிகப்பெரிய நீளமான 2-வது கடற்கரை. மெரினா கடற்கரை ஒரு அடையாள சின்னம். கடலில் பேனா சின்னம் அமைப்பதால் சுற்றுசூழல் பாதிக்கப்படும். மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
பேனா நினைவு சின்னம் அமைந்தால், மெரினா என்ற அடையாளம் போய் பேனா கடற்கரை என மாறிவிடும். தானியங்கி எந்திரம் மூலம் மது வழங்கும் திட்டத்தை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்." என்று கூறினார்.
Comments
Post a Comment