Skip to main content

FEATURED POSTS

How to Start Affiliate Marketing with No Money Step-by-Step in 2024

Today’s news

 Today’s news

அண்ணாமலை மாமா சூப்பர் வீடியோவை பார்த்து கொண்டாடிய குழந்தை காட்டுத்தீ போல பரவும் வீடியோ....


 

ஸ்டாலின் தப்பிக்க முடியாது., சுத்து போடும் பாஜக., திமுகவிற்கு விழுந்த முதல் இடி!

 

எனக்கு ஹிந்தியும் தெரியும்; பிரதமரிடம் பேசி அசத்திய சிறுவன; வியந்து பார்த்த கேரள முதல்வர்


விஜய் விவாகரத்து குறித்து அவரது நட்பு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளனர்.


விஜய்-சங்கீதா

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் தனது மனைவியை அழைத்து வராதது மற்றும் இயக்குனர் அட்லி வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கும் விஜய் தனியாக வந்ததால் அவர் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும், விஜய் சங்கீதாவை விட்டு அவரது அலுவலகம் இருக்கும் இடத்தில் இருக்கும் வீட்டில் தங்கி வருவதாகவும் தகவல் பரவியது. தொடர்ந்து, சங்கீதாவுக்கும் விஜய் பெற்றோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாம்.


விவாகரத்து

இதற்கெல்லாம் ஒரு படி மேலாக விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நெருங்கி பழகுவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. இது அவர் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. 

இந்நிலையில், விஜய்-சங்கீதா இடையே பிரச்சனை எதுவும் இல்லை அவர்கள் இருவருமே மொபைல் போனில் பேசி வருவதாக விஜய்யின் நட்பு வட்டாரங்கள் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 



இதுதான் என் வாழ்வில் என்னை மிகவும் பாதித்த சம்பவம்!.. மேடையில் ரசிகர்களை கண்கலங்க வைத்த விஜய்..

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவின்

பெருமையாகவும் திகழ்ந்து வருகிறார். விஜய் சம்பாதித்து வைத்த செல்வம் ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் செல்வாக்கு அதிகம் வாய்க்கப் பெற்றவராக விளங்கி வருகிறார். 

இத்தனை பெருமைக்குரிய விஜயை சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்த பெருமை அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரையே சேரும். நாளைய தீர்ப்பு படத்தில் இருந்து விஜயை கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிற்காக தயார்படுத்தி இன்று ஒட்டுமொத்த தமிழ் நாடும் திரும்பி பார்க்க வைத்த பெருமைக்கு சொந்தக்காரரே சந்திரசேகர் தான்.


தொடர்ந்து பல படங்களை விஜய்க்காக இயக்கி அந்தப் படங்களை வெற்றியடையவும் செய்தார். இப்படி பல படங்களில் தனது முகத்தை காட்டி வந்த விஜயை திரும்பி பார்க்க வைத்த படமாக அமைந்தது ‘செந்தூரப் பாண்டி’ படம் தான். அந்தப் படத்தில் விஜய்காக விஜயகாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் ஏற்று நடித்து விஜய்க்கு ஒரு நல்ல பேரை வாங்கிக் கொடுத்தார் கேப்டன்.


இந்த நிலையில் விஜயின் பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில் ரசிகர்கள் பலர் அவர்களுக்கு விருப்பமான கேள்விகளை கேட்க விஜய் சுவாரஸ்யமான பதில்களை கூறியிருக்கிறார்.


 அதில் விஜய்க்கு பிடித்தமான நடிகர்கள், நடிகைகள் யார் என கேட்க தனக்கு பிடிக்காத நடிகர்களே இல்லை என கூறியிருக்கிறார். 

மேலும் உங்களுக்கு மனதளவில் பாதித்த விஷயம் எதாவது இருக்கிறதா? என்று ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு பதிலளித்த விஜய் ‘எனக்கு மனதளவில் பாதித்த விஷயம் என்றால் அது என் தங்கை வித்யா இறந்த சம்பவம் தான். அது தான் என்னை மிகவும் பாதித்தது. ஆனால் அவளை நாங்கள் புதைக்கவில்லை, விதைத்திருக்கிறோம், விதைத்ததனால் தான் இன்று எனக்கு இவ்ளோ தங்கைகள் இருக்கின்றனர்’ என ரசிகர்களை ஆனந்தக் கண்ணீரில் திகைக்க வைத்தார்...


TAMIL CINEMA NEWS | சினிமா செய்திகள் 

கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் க்யூல தான் நிக்கணும்.. விஜய், சூர்யாவை காக்க வைக்கும் இயக்குனர்

எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் காத்திருக்க வேண்டும் என்ற ஒரு இடத்தில் தான் இயக்குனர் இருக்கிறார்.


டாப் ஹீரோக்களை கவர்ந்த டைரக்டர்கள் என்றால் குறிப்பிட்டு சொல்லும் படியாக சில பேர் தான் இருக்கின்றனர்.

 பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த இயக்குனர்களின் படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் உட்பட பல நடிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட சில இயக்குனர்கள் முன்னணி ஹீரோக்களின் சாய்ஸாக இருக்கின்றனர். அப்படி அனைவரும் விரும்பும் ஒரு இயக்குனர் தான் வெற்றிமாறன். தன்னுடைய எதார்த்தமான படைப்புகளின் மூலம் தேசிய விருது உட்பட பல விருதுகளை தட்டி தூக்கி இருக்கும் இவர் சமீபத்தில் வெளிவந்த விடுதலை மூலம் மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.


அதைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்காகவே பல நடிகர்களும் போட்டி போட்டு வருகிறார்களாம். அதில் தனுஷ் வடசென்னை இரண்டாம் பாகத்திற்காக வருட கணக்கில் காத்திருக்கிறார்.


அது மட்டுமல்லாமல் சூர்யா கூட வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்காக வரிசையில் நிற்கிறார். இப்படி எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் காத்திருக்க வேண்டும் என்ற ஒரு இடத்தில் தான் வெற்றிமாறன் இருக்கிறார். அந்த வகையில் விஜய் மற்றும் சூப்பர் ஸ்டாருக்கும் இதே நிலைமை தானாம்.


இப்படி ஒரு கொள்கையோடு இருக்கும் வெற்றிமாறன் எவ்வளவு கோடி பணம் கொடுத்தாலும் மசியாதவர். எனக்கு கதையின் தரம் தான் முக்கியம். அதற்காக எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருந்து படம் எடுப்பேன் என்று தைரியமாக இவர் கூறி வருகிறார். இதுவே இவருடைய படங்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.


மேலும் அவருடைய திரைப்படங்கள் வருடங்கள் கடந்தாலும் நிலைத்து நிற்பதற்கும் வெற்றிமாறன் ஒருவரே காரணமாக இருக்கிறார். 

அந்த வகையில் தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்த படங்களுக்காக இப்பவே அட்வான்ஸ் தொகை கொடுக்க முன் வந்தாலும் இவர் வேண்டாம் என்று கூறி விடுகிறாராம். இதன் மூலம் அவர் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது.


Mr. கழுகு: 'தங்கம் தென்னரசு விளக்கவே இல்லை..!' - கண் சிவந்த ஸ்டாலின்! 


ஆயிரம் விளக்கு தி.மு.க எம்.எல்.ஏ எழிலன், அறிவாலயத்தில் முதல்வரைச் சந்தித்து நேரடியாகத் தன் வருத்தத்தைக் கொட்டியிருக்கிறார்.


“குருப்பெயர்ச்சியைத் தொடர்ந்து அமைச்சர்கள் பெயர்ச்சியும் வருகிறதுபோலவே..?”


 பொங்கலைச் சுவைத்தபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். “வழக்கமான வதந்தியாக இருக்கப்போகிறது...” என்றோம். “தொடக்கத்தில் எனக்கும் அப்படித்தான் தோன்றியது. விசாரித்தேன், அமைச்சரவை மாற்றம் குறித்து மேலிடம் சீரியஸாக விவாதித்திருப்பதால், விஷயம் கவனிக்கப்படவேண்டியதுதான்” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.


“பால் வளத்துறை அமைச்சர் நாசர் மீதும், அவர் குடும்பத்தினர் மீதும் ஏகப்பட்ட புகார்கள் ஆட்சித் தலைமைக்குச் சென்றிருக்கின்றன. ஏற்கெனவே நாசரின் மகனிடமிருந்த கட்சிப் பதவியைப் பறித்து எச்சரித்தது கட்சித் தலைமை. அதன் பிறகும் அவர்களின் செயல்பாட்டில் தலைமைக்கு திருப்தி இல்லையாம். அதேபோல, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மீதும் புகார்கள் சென்றிருக்கின்றன. ‘அமைச்சரின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அமைச்சரின் உறவினர்கள் ஆட்டம் துறைக்குள் அதிகரித்திருக்கிறது’ என உளவுத்துறையும் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம். முதல்வரின் ரெட் ஷீட்டில் முதல் இரண்டு பெயர்கள் இவர்களுடையவைதான் என்கிறது கோட்டை வட்டாரம்.”


அமைச்சரவை மாற்றம் குறித்து மேலிடம் சீரியஸாக விவாதித்திருப்பதால், குரு பெயர்ச்சியைத் தொடர்ந்து அமைச்சர்களின் பெயர்கள் பெயர்ச்சியில் வருகிறது..."


- கழுகார் தரும் இது குறித்த விரிவான எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்...

முதல்வரின் ரெட் ஷீட்டில் இருக்கும் 2 அமைச்சர்கள் யார் யார்..?

அமைச்சராகும் ஜாக்பாட் யார் யாருக்கு..?


12 மணி நேர வேலை மசோதா விவகாரத்தில் முதல்வரிடமே வருத்தத்தைக் கொட்டிய தி.மு.க எம்எல்ஏ...

முதல்வரின் ரியாக்சன்... என

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


* 'இன்னும் ஒரு படம்தான்...' என மெர்சலான நடிகரின் அரசியல் முடிவு!

இன்னும் ஒரு படத்தை முடித்துவிட்டு, தீவிர அரசியலில் இறங்க முடிவெடுத்திருக்கிறாராம் மெர்சலான நடிகர். சம்பள விஷயத்தில் அநியாய கறார் காட்டுகிற பின்னணியும் இதுதானாம். அடுத்த படத்துக்கு 150 சி கேட்கும் நடிகர், நாடாளுமன்றத் தேர்தலை மனதில்வைத்து தொகுதிவாரியாக இப்போதே பசைப் பரிவர்த்தனைகளைச் செய்ய நினைக்கிறாராம். ஆட்களையும் இப்போதே தேர்வுசெய்து, நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் வியூகங்களில் இருக்கிறதாம் நடிகர் தரப்பு. # ‘ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா..!’

டெல்டா மாவட்டத்தின் சக்தி வாய்ந்த குக்கர் கட்சிப் புள்ளியை, அசால்ட்டாக இலைக் கட்சிப் பக்கம் கொண்டுவந்துவிட்டார் பெருந்தலைவர் பெயர்கொண்ட மாஜி. 


அடுத்தடுத்த தேர்தல்களால் கோடிக் கணக்கில் நஷ்டத்தில் இருந்த குக்கர் கட்சிப் புள்ளி, டெல்டா மாவட்ட ட்ரீட்மென்ட் புள்ளிக்கு எதிராகக் களம் கண்டவர். ‘உங்க மொத்தக் கடனையும் நான் ஏற்கிறேன்’ என மாஜி சொல்ல, ‘கடனை நான் பார்த்துக்கிறேன். மாவட்டப் பொறுப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க’ என்றாராம் குக்கர் புள்ளி. ‘ட்ரீட்மென்ட் புள்ளிக்கு எதிராகச் சரியான ஆள்’ எனச் சொல்லி அதற்கும் ஓகே சொல்லி அழைத்தாராம் துணிவானவர்.


* காக்கி மாஜிக்கும் துணிவானவருக்கும் இடையே நடக்கும் மோதல் விவகாரத்தின் உள்ளடி நாடகம்!


* அமைச்சரின் ஆடியோ விவகாரத்தில் உளவுத்துறை போட்ட 'நோட்'...

கிறுகிறுக்க வைக்கும் சீக்ரெட் அரசியல் தகவல்களைப் படிக்க

 இங்கே கிளிக் செய்யவும்...


சமீபத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சபரீசனும், அமைச்சர் உதயநிதியும் ஒரே ஆண்டில் முறைகேடாகச் சம்பாதித்தாகப் பேசியதாக, ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பா.ஜ.க வெளியிட்டது.


இதற்கு மறுப்பு தெரிவித்த பழனிவேல் தியாகராஜன், அது போலியான ஆடியோ எனக் கூறினார். அதைத் தொடர்ந்து, மீண்டும் பழனிவேல் தியாகராஜன் ஆடியோவை பா.ஜ.க வெளியிட்டது.


இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதாக ஒபாமா உள்ளிட்ட சிலர் பேசும் வீடியோக்களைப் பகிர்ந்து தற்போது அறிக்கை ஒன்றை பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருக்கிறார்.


``உதயநிதி, சபரீசனிடமிருந்து என்னைப் பிரிக்கத் துடிக்கிறது ஒரு பிளாக்‌ மெயில்‌ கும்பல்‌!" - பிடிஆர்

சி. அர்ச்சுணன்


பழனிவேல் தியாகராஜன் - உதயநிதி, சபரீசன்..

``உதயநிதி, சபரீசனிடமிருந்து என்னைப்‌ பிரிப்பதன்‌ மூலமாக தங்களது அரசியல்‌ எண்ணங்களை நிறைவேற்றத்‌ துடிக்கிறது ஒரு பிளாக்‌ மெயில்‌ கும்பல்‌." - பழனிவேல் தியாகராஜன்....


சமீபத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சபரீசனும், அமைச்சர் உதயநிதியும் ஒரே ஆண்டில் முறைகேடாகச் சம்பாதித்தாகப் பேசியதாக, ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பா.ஜ.க வெளியிட்டது. தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும், தாங்கள்தான் அந்த ஆடியோவை வெளியிட்டதாகக் கூறியிருந்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பழனிவேல் தியாகராஜன், அது போலியான ஆடியோ எனக் கூறினார். அதைத் தொடர்ந்து, மீண்டும் பழனிவேல் தியாகராஜன் ஆடியோவை பா.ஜ.க வெளியிட்டது.



பி.டி.ஆர் - அண்ணாமலை

இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதாக ஒபாமா உள்ளிட்ட சிலர் பேசும் வீடியோக்களைப் பகிர்ந்து தற்போது அறிக்கை ஒன்றை பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருக்கிறார்.


அந்த அறிக்கையில், ``உண்மை போன்று தோற்றமளிக்கும்‌ வீடியோக்களை கணினி மூலம்‌ உருவாக்க முடியும்‌ என்றால்‌, ஆடியோ கோப்புகளை என்னவெல்லாம்‌ செய்ய முடியும்‌ என்று கற்பனை செய்து பாருங்கள்‌. நேற்று முதல்‌ சமூக வலைதளங்களில்‌ பரவி வரும்‌ ஆடியோ கிளிப்பிலுள்ள எந்த செய்தியையும்‌, எந்த ஒரு தனி நபரிடமோ, தொலைபேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நான்‌ கூறவில்லை என்று உறுதியாகக் கூற விரும்புகிறேன்‌.


இந்த உரையாடல்‌ தங்களுடன்‌ நடந்தது என்று சொல்ல இதுவரை யாரும்‌ முன்வராதது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க மாநிலத் தலைவர்‌ யாரோ ஒருவர்‌ குறிப்பிட்ட எந்த நபருடனும்‌ சொல்லாத ஒன்றை, ஆடியோவாக வெளியிடும்‌ அளவுக்கு கீழ்த்தரமாக இறங்கியிருக்கிறார். அவரது அரசியலின்‌ தரம்‌ இவ்வளவுதான்‌. மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ நாங்கள்‌ ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில்‌ உயரிய இலக்குகளை அடைய நாங்கள்‌ மிகப்பெரிய நிதி சீர்திருத்தங்களை மேற்கொண்டு, கடந்த பத்தாண்டுகளில்‌ செய்ய முடியாத சாதனைகளை இரண்டே ஆண்டுகளில்‌ சாதித்திருக்கிறோம். இவை கடந்த பத்தாண்டுகளில்‌ ஒன்றிய பா.ஜ.க அரசு செய்தவற்றைவிட மகத்தான சாதனைகளாகும்‌.


அண்ணாமலை

இத்தகைய சாதனைகளை சில சக்திகளால்‌ சகித்துக்‌ கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள்‌ எங்களது சிறப்பான பணிகளை சீர்குலைக்கும்‌ நோக்கத்துடன்‌, நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுத்திக்காகப் பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டிருக்கின்றனர். எங்களது நம்பிக்கை நட்சத்திரமான மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ பொதுமக்கள்‌ மத்தியில்‌, குறிப்பாக இளைஞர்கள்‌ மத்தியில்‌ மகத்தான வரவேற்பைப் பெற்றிருக்கிறார். இதைப்‌ பார்த்து அவரை அமைச்சராக்க வேண்டும்‌ என்று தலைவரிடம்‌ வலியுறுத்தியவர்களில்‌ நானும்‌ ஒருவன்‌.


அனைவரது எதிர்பார்ப்பையும்‌ விஞ்சி அமைச்சர்‌ உதயநிதி செயல்பட்டு வருகிறார். முதலமைச்சரைப்‌ போலவே கள ஆய்வும்‌ சிறப்பாக நடத்தி வருதிறார்‌. தமிழக விளையாட்டுத்துறையை நோக்தி உலதின்‌ கவனத்தை ஈர்த்து வருதிறார்‌. இப்படிப்பட்ட ஆற்றல்மிகு செயல்வீரரைக்‌ குறித்து நான்‌ எப்படி தவறாகப்‌ பேசுவேன்‌... அதேபோன்று, நமது திராவிட மாடல்‌ ஆட்சியில்‌ அனைத்து அமைச்சர்களும்‌ ஓரணியாக ஒன்றுபட்டு மகத்தான சாதனைகளை எய்தும்‌ வண்ணம்‌ செயல்பட்டு வருதின்றனர்‌. அவ்வாறு இருக்கையில்‌ நான்‌ ஏன்‌ அவர்களைப்‌ பற்றி தவறாகப் பேசவேண்டும்‌... நான்‌ அரசியலுக்கு வந்தது முதல்‌ எனக்கு நல்ல வழிகாட்டியாகவும்‌, ஆலோசகராகவும்‌, உறுதுணையாகவும்‌ இருப்பவர்‌ சபரீசன்‌. எதிர்க்கட்சிகள்‌கூட உதயநிதி, சபரீசன்‌மீது எந்தக் குற்றச்சாட்டும்‌ வைக்கவில்லை.


பழனிவேல் தியாகராஜன் - உதயநிதிஸ்டாலின், மற்றும் சபரீசன்

எனவே, அவர்கள்‌மீது களங்கம்‌ சுமத்தும்‌ வீண்‌ முயற்சியில்‌ இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள்‌ உருவாக்கப் படுகின்றன. இவர்களிடமிருந்து என்னைப்‌ பிரிப்பதன்‌ மூலமாக தங்களது அரசியல்‌ எண்ணங்களை நிறைவேற்றத்‌ துடிக்கிறது ஒரு பிளாக்‌ மெயில்‌ கும்பல்‌. ஆனால்‌ இது போன்ற கோழைத்தனமான முயற்சிகள்‌ ஒருபோதும்‌ வெற்றி பெறாது. தி.மு.க தொடங்கிய காலத்திலிருந்தே, ஓர் இயக்கம்‌, ஒரே கட்சி, ஒரே குடும்பம்‌ என அனைவரும்‌ ஒற்றுமையுடன்‌ இயங்கி வருதிறோம்‌. இனி வரும்‌ காலங்களிலும்‌ அவ்வாறே தொடர்வோம்‌" என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். பழனிவேல் தியாகராஜன் இது தொடர்பாக விளக்க வீடியோவையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கிறுகிறுக்க வைக்கும் சீக்ரெட் அரசியல் தகவல்களைப் படிக்க

 இங்கே கிளிக் செய்யவும்... 


மணல் கடத்தல்: தூத்துக்குடி விஏஓ கொலையில் அதிர வைக்கும் ஆடியோ


தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோயில்பத்து கிராம நிர்வாக அலுவலரான லூர்து பிரான்சிஸ், மணல் கடத்தலை தடுத்ததால், நேற்று அவர் பணிபுரிந்த அலுவலகத்திலேயே 2 பேரால் வெட்டப்பட்டதில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை 

ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், "தூத்துக்குடி மாவட்டத்துல பணிபுரியுற நிறைய வி.ஏ.ஓ-க்களுக்கு மனசாட்சியே இல்லையா?" என அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வி.ஏ.ஓ ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

" அவரோட இறப்புக்கு ஒரு வகையில நீங்களும் காரணம். ஆனா, அவர் இறந்த பிறகு முதல் ஆளா அவருக்கு அஞ்சலி செலுத்த கிளம்பிட்டீங்க..."


”மணல் கொள்ளையர்கள், அரசு நில ஆக்கிரமிப்பாளர்களால் என் உயிருக்கு ஆபத்து. அதனால் பணியிட மாறுதல் செய்துடுங்க” என உயிரிழந்த வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதாக பெண் வி.ஏ.ஓ ஒருவர் பேசும் ஆடியோ வைரலாகிவருகிறது.


தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள சூசைபாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர், முறப்பநாடு கோயில்பத்து கிராம நிர்வாக அலுவலராக கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணிபுரிந்துவருகிறார். அருகிலுள்ள கலியாவூரைச் சேர்ந்த ராம சுப்பிரமணியன் என்பவர் தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் அள்ளியது தொடர்பாக கடந்த 13-ம் தேதி, முறப்பநாடு காவல் நிலையத்தில் எழுத்துபூர்வமாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ராம சுப்பிரமணியன் தலைமறைவானார். போலீஸார் அவரை தேடிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், லூர்து பிரான்சிஸ் கடந்த 25-ம் தேதி தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது தன் நண்பர் மாரிமுத்துவுடன் ராம சுப்பிரமணியன் வந்திருக்கிறார்.


உயிரிழந்த வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ்

 “மண் அள்ளுனா உனக்கு என்ன... என் மேலயே போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுப்பியா?” எனச் சொல்லி, தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். மாரிமுத்துவும் அரிவாளால் தாக்கியிருக்கிறார். இதில், லூர்து பிரான்சிஸின் தலை, கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேசையிலிருந்து அப்படியே அவர் கீழே சரிந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அந்தப் பகுதியினர் ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த லூர்து பிரான்சிஸை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த்ச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த முறப்பநாடு காவல் நிலைய போலீஸார், உடலில் ரத்தக்கறையுடன் தாமிரபரணிக் கரையோரம் தப்பியோடிய ராம சுப்பிரமணியனைக் கைதுசெய்தனர். மற்றொரு குற்றவாளியான மாரிமுத்துவை இன்று (26-ம் தேதி) கைதுசெய்தனர். லூர்து பிரான்சிஸின் படுகொலையைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், லூர்து பிரான்சிஸ் ஏற்கெனவே பணிமாறுதல் கேட்டிருந்ததாகக் கூறி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வி.ஏ.ஓ ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதில், “தூத்துக்குடி மாவட்டத்துல பணிபுரியுற நிறைய வி.ஏ.ஓ-க்களுக்கு மனசாட்சியே இல்லையா...



லூர்துவின் மனைவிக்கு ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர் 

லூர்துவின் மனைவிக்கு ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர்

அவரோட இறப்புக்கு ஒரு வகையில நீங்களும் காரணம். ஆனா, அவர் இறந்த பிறகு முதல் ஆளா அவருக்கு அஞ்சலி செலுத்த கிளம்பிட்டீங்க. ’சங்கம்’ என்ற போர்வையில் சுயநலத்துக்காகவும், ஆதாயத்துக்காகவும் நடத்திட்டு வர்றீங்க. ஆதிச்சநல்லூரில் அரசுப் புறம்போக்கு நிலத்தை அரசுக்கே மீட்டுக் கொடுத்த சம்பவத்தில் ரெண்டு வருஷத்துக்கு முன்னால இதே வி.ஏ.ஓ லூர்து சாரை அந்தக் கும்பல் அரிவாளால வெட்டுச்சு. அப்போ கலெக்டர் செந்தில்ராஜ் சாரை நாம எல்லாருமே போயி பார்த்தோம். தனக்குக் கொலை மிரட்டல் இருக்குறதுனால ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுல இருந்து தூத்துக்குடி தாலுகாவுல ஏதாவது ஒரு ஏரியாவுக்கு என்னை மாத்திடுங்க சார்னு சொன்னார்.


`தூத்துக்குடி தாலுகாவுல இப்போ காலிப் பணியிடம் இல்லை. ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிடுறீங்களா?’ன்னு கலெக்டர் சார் சொன்னாங்க. காலிப் பணியிடம் இருந்திருந்தா கலெக்டர் சார் நிச்சயம் செய்து கொடுத்திருப்பார். ஆனா, மூணு மாசத்துல தூத்துக்குடி தாலுகாவுல மூணு காலிப் பணியிடம் வந்துச்சு. ஆனா, லூர்து சாருக்கு அந்தப் பணியிடத்தை வாங்கிக் கொடுத்திருக்கலாமே... சங்கம் அவருக்கு என்ன செஞ்சுச்சு... அன்னைக்கு யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஆனா, இப்போ அவரோட உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்துட்டீங்க. சங்கத்தோட கவனக்குறைவு அதிகம் இருக்கு. அவர் மட்டும் தூத்துக்குடி தாலுகா பகுதியில பணியிட மாறுதல் செய்ய நீங்க உதவி செஞ்சுருந்தீங்கன்னா இன்னைக்கு அவர் உயிரிழந்திருப்பாரா... அவரோட மனைவி, பிள்ளைகள் நிர்க்கதி ஆகியிருப்பாங்களா?” எனப் பேசியிருக்கும் ஆடியோ வைரலாகிவருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் பேசினோம், “லூர்து பிரான்சிஸ் நேர்மையான அதிகாரி.

கோவில்பத்து வி.ஏ.ஓ அலுவலகம்

ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க, தனியார் வசமிருந்த 1.5 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டு அரசிடம் ஒப்படைத்ததில் திறம்படச் செயல்பட்டார். அவர் டிரான்ஸ்ஃபர் கேட்டது உண்மைதான். ஆனால், அந்த நேரத்தில் தூத்துக்குடி தாலுகாவில் காலிப் பணியிடம் இல்லை. அருகிலுள்ள ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்குச் செல்லுங்கள் எனச் சொன்னதற்கு மறுத்தார். வி.ஏ.ஓ-க்கள் டிரான்ஸ்ஃபர் என்பது மாவட்ட ஆட்சியரின் முடிவு அல்ல. மாவட்ட வருவாய் அலுவலரின் முடிவுதான். அதுமட்டுமல்லாமல் பணிமூப்பு அடிப்படையிலும், கவுன்சலிங் மூலமும்தான் டிரான்ஸ்ஃபர் செய்யப்படும். அவரின் இழப்பு ஈடுகட்ட முடியாதது. நடக்கக் கூடாத ஒரு துயரச் சம்பவம் நடந்துவிட்டது. குற்றவாளிகள் நிச்சம் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.  


``தமிழகத்தில் புதிதாக 708 நகர்புற நலவாழ்வு மையங்கள் அமைக்க‌ப்படும்'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

``தமிழகத்தில் புதிதாக 708 நகர்புற நலவாழ்வு மையங்கள் அமைக்க‌ப்படும்'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..

இங்கே கிளிக் செய்யவும்... 

Tamil News Live Today: சத்தீஸ்கர்: நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படையினர் 10 பேர் பலி!

Latest Tamil News

India News

Latest News in Tamil nadu

World News Tamil

Environment News Tamil

Technology News Tamil

CINEMA NEWS

Tamil Cinema News

Bollywood Cinema News

SPIRITUAL news.....

இங்கே கிளிக் செய்யவும்... 


Comments