தற்போதைய செய்திகள்
‛தி கேரளா ஸ்டோரி’ படம் பற்றி பிரதமர் மோடி பேச்சு! கர்நாடகா பிரசாரத்தில் காங்கிரஸ் மீது கடும் சாடல்.
பெங்களூர்:
பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று வெளியானது. இந்நிலையில் தான் ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் பற்றி கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பாக பேசினார். மேலும் அந்த படத்துக்கு தடை விதிக்க கோரும் காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஹிந்தி திரைப்பட இயக்குனர் சுதிப்தோ சென் கதை எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் ‛தி கேரளா ஸ்டோரி'. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது கேரளாவை சேர்ந்த ஏராளமான பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாத செயலில் ஈடுபடுத்தப்படுவது போல் காட்சிகள் இருந்ததே இதற்கு காரணமாகும்.
அதாவது கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுவதோடு ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டு சதித்திட்டங்கள் தீட்டுவது போல் காட்சிகள் இருந்தன.
இந்நிலையில் தான் ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளதோடு, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பல்லாரியில் இன்று பிரதமர் மோடி பிரசாரம் செய்து பேசினார். அப்போது ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:
கேரளா என்பது கடின உழைப்பாளிகள் மற்றும் திறமையானவர்கள் கொண்ட மாநிலமாகும். இங்கு அறிவார்ந்த மக்கள் உள்ளனர். இத்தகைய அழகிய கேரளா மாநிலத்தில் தீவிரவாதம் எப்படி ஊடுருவுகிறது என்பதை காட்ட ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் முயற்சிக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்துக்கு தடை செய்து தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதுபோன்ற விஷயங்களை தடை செய்யவும், நாட்டின் வளர்ச்சியை புறக்கணிக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு தெரியும்.
தீவிரவாதம் தற்போது புதிய வடிவத்தை கையில் எடுத்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர சமூகத்தை உள்ளிருந்து பிரித்தாள்வதற்கான வேலையை செய்கிறது. 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தீவிரவாதத்தின் புதிய முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது தீவிரவாத அமைப்புகள் முன்பு மண்டியிட்டு இருந்தது. இதனால் நீண்டகாலமாக வன்முறையால் பாதித்தோம். மேலும் தீவிரவாதத்தில் இருந்து இந்த நாட்டை காங்கிரஸ் ஒருபோதும் பாதுகாக்கவில்லை. இத்தகைய சூழலில் கர்நாடகத்தை காங்கிரஸால் பாதுகாக்க முடியுமா?'' என கேள்வி எழுப்பி சாடினார்.
2. இந்தியா
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்.. ரஜோரியில் 5 இந்திய வீரர்கள் வீரமரணம்! ராணுவ ஆபரேஷனில் ஷாக்...
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் ரஜோரியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ரஜோரியில் இன்று இந்தியா பாதுகாப்பு படை சார்பாக தீவிரவாதிகளை சோதனை செய்ய படைகள் அனுப்பப்பட்டன. சமீபத்தில் அங்கே நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தவும், தீவிரவாதிகளை பிடிக்கவும் இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது.
இந்த ஆபரேஷனின் போது தீவிரவாதிகள் - ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. சரமாரி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. இதில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
ரஜோரி மாவட்டத்தின் கண்டி பகுதியில் உள்ள கேஸ்ரி மலையில் இந்த தீவிர எதிர்ப்பு நடவடிக்கை இன்று நடந்தது. ஒரு குகைக்குள் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது குறித்து ராணுவத்திற்கு சீக்ரெட் தகவல் கிடைத்து அங்கே சென்று சோதனை செய்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த நிலையில் ரஜோரியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே3 பேர் உயிரிழந்த நிலையில் காயம் அடைந்த 6க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சையில் இருந்த 6 பேரில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
தற்போது அங்கே கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் அங்கே நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தவும், தீவிரவாதிகளை பிடிக்கவும் இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது.
©நிதியமைச்சர் முதல்..முதல்வர் ஸ்டாலின் வரை..மீண்டும் புயலை கிளப்பும் ஆளுநர் பேச்சு..இறுதியில் ஆளுநர் சொன்ன அந்த வார்த்தை..!
3. சித்திரை திருவிழா :
தங்கக்குதிரையில் கள்ளழகர்.. மக்கள் வெள்ளத்தில் வைகை.. விண்ணதிர்ந்த கோவிந்தா முழக்கம்..!
பண்பாட்டின் தலைநகரம் மதுரையில்-யில் 22 நாட்கள் நடைபெறும் 'திருவிழாக்களின் திருவிழா' - சித்திரைப் பெருவிழாவில் ஏப்ரல் 23 முதல் மே 4 வரை மீனாட்சி அம்மன் கோவில் விழாக்களும், மே 1 முதல் 10 வரை கள்ளழகர் கோவில் விழாக்களும் நடைபெற்று வருகின்றன. இதில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடி தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்கினார். ஆழ்வார்புரம், வடகரை பகுதியில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கள்ளழகர் பவனி வந்தார். கோவிந்தா...கோவிந்தா... கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை வணங்கினர்.
கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கும் அந்த நிகழ்வை காண இரவு முழுவதும் பக்தர்கள் காத்து கிடந்தனர். மதுரையில் பெய்த தொடர் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல், லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகர் வரும் வழி நெடுகிலும் அழகர், கருப்பசாமி வேடம் அணிந்த மேள தாளத்துடன் ஆடி பாடி கள்ளழகரை வரவேற்றனர். இந்நிகழ்வானது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
மேலும் விரிவான விளக்கங்களை காண...
Comments
Post a Comment