Skip to main content

FEATURED POSTS

How to Start Affiliate Marketing with No Money Step-by-Step in 2024

கருணாநிதி பிறந்தநாள் விழாவும் ரத்தான குடியரசுத் தலைவர் வருகையும் - திமுக பிளான் என்ன?!.

கருணாநிதி பிறந்தநாள் விழாவும் ரத்தான குடியரசுத் தலைவர் வருகையும் - திமுக பிளான் என்ன?! 




நாடாளுமன்றத் திறப்பு விழாவில் புறக்கணிக்கப்பட்டதில் திரௌபதி முர்முவுக்கு வருத்தமிருக்கும், இதை அவர் நேரடியாகச் சொல்லவில்லை - யென்றாலும் உள்ளுக்குள் ஆதங்கம் இருக்கும்.” - பத்திரிகையாளர் - ப்ரியன். 

தமிழ்நாட்டை ஐந்து முறை முதலமைச்சர் பொறுப்பிலிருந்து ஆட்சி செய்தவர் கருணாநிதி. இவரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட தி.மு.க அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. 

கருணாநிதி பிறந்தநாள் விழாவும் ரத்தான குடியரசுத் தலைவர் வருகையும் - திமுக பிளான் என்ன?!

நாடாளுமன்றத் திறப்பு விழாவில் புறக்கணிக்கப்பட்டதில் திரௌபதி முர்முவுக்கு வருத்தமிருக்கும், இதை அவர் நேரடியாகச் சொல்லவில்லையென்றாலும் உள்ளுக்குள் ஆதங்கம் இருக்கும்.” - பத்திரிகையாளர் ப்ரியன்.

தமிழ்நாட்டை ஐந்து முறை முதலமைச்சர் பொறுப்பிலிருந்து ஆட்சி செய்தவர் கருணாநிதி. இவரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட தி.மு.க அரசு பெரும் முயற்சிகளை எடுத்துவருகிறது. வரும் ஜூன் மாதம் இந்தியாவின் முக்கியத் தலைவர்களை நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் ஒன்றிணைக்கத் திட்டமிட்டிருக்கிறது. இதன் முதல்கட்டமாக கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறந்துவைக்க இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சுமார் 4.89 ஏக்கர் அளவில் ரூ.230 கோடி மதிப்பில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, கதிரியக்க நோய் கண்டறிதல் என பல்வேறு வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனையைத் திறந்துவைக்க ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகை தரவிருந்தார். வரும் 5-ம் தேதி திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ரத்தான வருகை!

இந்த நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு சென்னை கிண்டியில் கட்டப்பட்டிருக்கும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா, நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்துகொள்வது ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.



புதிய நாடாளுமன்றக் கட்டடம்:

இதற்கான காரணம் குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 


குறிப்பாக புதிதாகக் கட்டியிருக்கும் நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறக்க இந்தியாவின் முதல் குடிமகளான திரௌபதி முர்முவுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அவரை அழைக்காமல் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. இதனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து திறப்பு விழாவைப் புறக்கணித்திருக்கின்றனர். இந்த நிலையில், தமிழகத்துக்கு அவர் வரவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டது அரசியல் நோக்கத்துக்குதான் என விமர்சிக்கப்படுகிறது.

காரணம் என்ன?


ஆனால், இதை மறுத்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் முதல் வாரத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார். எனவே, மருத்துவமனை திறப்பு விழாவை ஒத்திவைக்குமாறு ஏற்கெனவே எங்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த அடிப்படையில்தான் விழா ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. விழா ஜூலை முதல் வாரத்துக்குள் நடந்த திட்டமிடப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை” எனப் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்:

இது குறித்து விசாரித்தபோது, கடந்து சில தினங்களுக்கு முன்பாகவே குடியரசுத் தலைவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதாலும், மேலும் சில தனிப்பட்ட காரணங்களாலும் திறப்பு விழாவை மாற்றி அமைக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுதான் திறப்பு விழா மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. வரும் ஜூன் மாதம் 20-ம் தேதிக்குள் திறப்பு விழா நடக்கும்” எனவும் கூறுகின்றனர்..

கடந்த முறை குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் (பட்டியலினத்தைச் சேர்ந்தவர்) நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டியபோது அழைக்கப்படவில்லை என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு தற்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு (பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்) புறக்கணிக்கப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. ஆகவே, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து திறப்பு விழாவைப் புறக்கணித்திருக்கின்றனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்:

திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தபோது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பா.ஜ.க வாய்ப்பு தந்தது கவனம் ஈர்த்தது. எதிர்க்கட்சியினரும் இவருக்கு ஆதரவளித்தனர். ஆனால், அவரை நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்குப் புறக்கணித்திருப்பது பா.ஜ.க-மீது குற்றச்சாட்டை சுமத்த வழி செய்திருக்கிறது.


இது போன்ற நியமனங்களில் எங்கள் கட்சி வேற்றுமை பார்ப்பதில்லை. அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு வழங்குகிறது என்கின்றனர் பா.ஜ.க-வினர். ஆனால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பும் மரியாதையும் இவர்கள் ஆட்சியில் கிடைத்ததா... என்னும் கேள்வியை எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்றனர். இந்தச் சூழலில் தமிழகத்துக்கு அவர் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதனால், தி.மு.க அரசும் அவரின் வருகையை உறுதிசெய்ய தீவிரம் காட்டுகிறது.

மேலும் படிக்க..

 

செந்தில் பாலாஜி: IT ரெய்டு..டெல்லி 'ஆட்டம்' ஆரம்பமா? - 

ஐ.டி ரெய்டு... சிக்கலில் அமைச்சர் செந்தில் பாலாஜி - டெல்லி 'ஆட்டம்' ஆரம்பமா?!


தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 40-க்கும் அதிகமான இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பா.ஜ.க அரசு அரசியல்ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கையாக இது போன்ற ரெய்டுகளை நடத்துவதாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
தி.மு.க அமைச்சரவையில் செந்தில் பாலாஜி பவர்ஃபுல் அமைச்சராக வலம் வருகிறார். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் திமுக-வை பலப்படுத்துவதற்கான பொறுப்பு செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்தே அவர் மீது பா.ஜ.க ஒரு கண் வைக்கத் தொடங்கியது.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவ்வப்போது கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில், இந்த 'ரெய்டு நடவடிக்கை 'டெல்லி 'ஆட்டம்' ஆரம்பமா..?' என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. 

IT-ரெய்டு: அதிகாரிகளுடன் திமுக-வினர்  வாக்குவாதம்... பரபரப்பு... முழு அப்டேட்! 


ரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்வதற்காகச் சென்ற வருமான வரித் துறை அதிகாரிகளை, அமைச்சரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு, அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறி ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அதிகாரிகளின் காரையும் ஓரிடத்தில் உடைத்துச் சேதப்படுத்தினர். அதன் காரணமாக அதிகாரிகள் சில இடங்களில் சோதனை நடத்த முடியாமல் திரும்பவும் நேர்ந்தது. 

ரெய்டு குறித்த முழுமையான பின்னணி தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க... 

ஆ.ராசா + செந்தில் பாலாஜி + கனிமொழி.. திமுக திசையில் மாற்றிய போக்கஸ்.. டெல்லி களமிறக்கிய ஆபரேஷன்... 

சென்னை:

 தமிழ்நாடு பக்கம் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ தனது போகஸை திருப்ப உள்ளது. இன்று அதிகாலையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடுகள், இடங்களில் அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

பல்வேறு வடமாநிலங்களில் எதிர்கட்சிகளை முடக்க அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக ஒரு புகார் உள்ளது. முக்கியமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க, ஆபரேஷன் கமலாவை மேற்கொள்ள பாஜக இந்த மத்திய விசாரணை ஆணையங்களை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் புகார் வைத்து வருகின்றனர்.

மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது. அவருக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை விசாரணை திரும்பும் என்று கூட சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். அவர் அளித்த பேட்டியில், வெயிட் பண்ணுங்கண்ணா அமலாக்கத்துறை கொஞ்சம் பிஸியா இருக்காங்க. முடிச்சிட்டு இங்கதான் வருவாங்க. விரைவில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வார்கள், என்று கூறினார்.
இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அப்போதே பதில் அளித்து இருந்தார். அதில், அண்ணாமலை எப்போது அமலாக்கத்துறை இயக்குநரா? அல்லது அவர் இணை இயக்குநரா? ஒன்றிய அரசில் அவர் என்ன நிதி அமைச்சராக இருக்கிறாரா? அரவக்குறிச்சியில் தோல்வி அடைந்து ஓடினாரே.. அவர் தானே?
என்ன பொறுப்பில் இருக்கிறார் அவர்? அந்த பக்கமே அவரை பார்க்க முடியவில்லையே? அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேச முடியும்?. தன்னிச்சையாக செயல்பட கூடிய அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேசலாம். அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவது வெட்ட வெளிச்சம் ஆகிறது, என்று குறிப்பிட்டு இருந்தார். 
இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

ஆ.ராசா.


அண்ணாமலை சொன்னது போலவே தமிழ்நாடு பக்கம் டெல்லி தனது பார்வையை திருப்பி உள்ளது. அதன்படி, திமுக எம்பி, துணை பொதுச்செயலாளர்   
ஆ.ராசாவின் பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை சமீபத்தில் முடக்கி உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கோவையில் ராசாவின் பினாமிக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை முடக்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதன் மதிப்பு 55 கோடி ரூபாய் ஆகும். 2004 - 2007 காலகட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது ஆ ராசா இருந்த போது இந்த முறைகேட்டை செய்ததாக கூறப்படுகிறது. அதாவது ஹரியானவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்றிற்கு ரியல் எஸ்டேட் அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் வாங்கியதில் இந்த நிலம் வாங்கப்பட்டதும் புகார் வைத்துள்ளது.

2ஜி வழக்கு:

இன்னொரு பக்கம் திமுக எம்பி கனிமொழி மற்றும் ஆ.ராசாவிற்கு எதிராக சிபிஐ அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிபிஐ அமைப்பின் இரண்டு பெரிய வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதில் வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிற்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அப்பட்டமான சட்ட விதிமீறல் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வாதத்தை முன்வைத்துள்ளது. 
முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த தொடர் வழக்குகள் நடவடிக்கைகள் காரணமாக மத்திய அரசின் விசாரணை ஆணையங்கள் தமிழ்நாடு பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது,. 


Comments