Breaking News Live: கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு- உச்சநீதிமன்றம்..
டெல்லி: கர்நாடகா சட்டசபையில் முதல்வர் எடியூரப்பா நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க ஒருவார கால அவகாசம் கேட்ட பாஜகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. முன்னதாக எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார் கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலா.
Breaking News: கர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு! காவிரி கரையோர மக்களே உஷார்...
பெங்களூர்:
https://youtube.com/watch?v=NreBfJP5STw |
Japan teaser has multiple characters saying completely different things about Japan. Vaagai Chandra Sekar says, "He is a miraculous being in God's creation, who is beyond reproach." Another goes, "He is a comedy piece." Actor Sunil, on the other hand, says, "He is a dirty villain." However, the promo titled 'Who is Japan?', doesn't really give any answer. Nevertheless, given Karthi's retro look in the film, it promises to be a quirky ride.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழா | “வரலாற்றுப் பிழையாக இடம்பெறும் ஆபத்து” - கமல்ஹாசன்
சென்னை: “பிரதமரிடம் நான் முன்வைப்பதெல்லாம் ஒரே ஒரு எளிய கேள்விதான். இந்தத் தேசத்தின் மக்களுக்கு ஒன்றை மட்டும் தெரியப்படுத்துங்கள், ஏன் இந்தியக் குடியரசுத் தலைவர் நமது புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் கலந்துகொள்ளக் கூடாது?” என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை நடைபெற இருக்கும் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா ஒரு தேசியக் கொண்டாட்டம். எனக்கும் மிகுந்த பெருமிதம் கொடுக்கும் நிகழ்வு இது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நேரத்தில் இந்திய அரசுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேச நலன் கருதி, நாடாளுமன்றத் திறப்பு விழாவை நானும் வரவேற்கிறேன். அதேசமயத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்காததற்கும், திறப்பு விழா நிகழ்வின் திட்டமிடலில் எதிர்க்கட்சிகளை இணைத்துக் கொள்ளாததற்கும் எனது எதிர்ப்பினைப் பதிவு செய்கிறேன். தேசத்திற்கே பெருமிதம் தரவேண்டிய ஒரு தருணம், அரசியல் ரீதியான பிரிவினைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துவிட்டது துரதிர்ஷ்டவசமானது. பிரதமரிடம் நான் முன்வைப்பதெல்லாம் ஒரே ஒரு எளிய கேள்விதான். "தயவுசெய்து இந்தத் தேசத்தின் மக்களுக்கு ஒன்றை மட்டும் தெரியப்படுத்துங்கள், ஏன் இந்தியக் குடியரசுத் தலைவர் நமது புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் கலந்துகொள்ளக் கூடாது?" இந்தத் தேசத்தின் தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் இந்த முக்கியமான நிகழ்வில் ஏன் கலந்துகொள்ளக் கூடாது என்பதற்கான காரணமாக எனக்கு எதுவுமே புலப்படவில்லை. நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் சட்ட வரைவுகள் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தால்தான் இந்த நாட்டில் அது சட்டங்களாகவே ஆகமுடியும்.
நாடாளுமன்றத்தின் அமர்வுகளைத் தொடங்கவும், தள்ளிவைக்கவும் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உண்டு. நாடாளுமன்றம் செயல்படுவதில் நாட்டின் குடியரசுத் தலைவருக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு. இந்த விவகாரத்தில் சமரசம் நிலவும் விதமாக இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை இந்நிகழ்வுக்கு அழைக்க வேண்டும் என்பதை என் தரப்பு ஆலோசனையாக பிரதமருக்குத் தெரிவிக்கிறேன். புதிய நாடாளுமன்றம் சாதாரணமானதொரு கட்டடம் மட்டும் அல்ல. இனி வருங்காலம் நெடுக அதுவே இந்தியக் குடியரசின் அரசியல் உறைவிடமாகத் திகழும். மாபெரும் வரலாற்றுப் பிழையாக இடம் பெறக்கூடிய ஆபத்துமிக்க இந்தப் பிழையை உடனடியாக சரிசெய்யும்படி பிரதமரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தவறு சரிசெய்யப்பட்டால், அரசியல் தலைமைகளின் வரலாற்றில் இதொரு மைல்கல்லாகத் திகழும். நமது குடியரசின் உறைவிடத்தில் அதன் அத்தனை உறுப்பினர்களும் சென்று அமரவேண்டும். அனைத்துத் தரப்பினரும் பங்கேற்பதே சரியான மக்களாட்சி என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே, இந்த நிகழ்வைப் புறக்கணிக்க முடிவுசெய்திருக்கும் அத்தனை எதிர்க்கட்சிகளையும் கூட தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோருகிறேன். இதனை ஒட்டி உங்களுக்கு இருக்கும் மாற்றுக் கருத்துக்களை பொதுவெளியில் பதிவு செய்யலாம், புதிய நாடாளுமன்றத்தின் சபையிலும் பதிவு செய்யலாம். நம்மைப் பிரிப்பவற்றைக் காட்டிலும் இணைப்பவை அதிகம் என்பதை அனைத்துக் கட்சியினரும் நினைவில்கொள்ள வேண்டுகிறேன். இந்த நிகழ்வுக்காக நமது தேசமே ஆர்வமாகக் காத்திருக்கிறது, மொத்த உலகமும் அமைதியாக நம்மை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவை நமது தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குவோம், நமது அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒரு நாள் தள்ளிவைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
ஐ.டி அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம்: இதுவரை யாரும் கைது செய்யப்படாததற்கு தமிழக பாஜக கண்டனம்.
சென்னை:
கரூரில் வருமான வரித் துறையினர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படாதது தமிழக அரசின், காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையை, மெத்தனப் போக்கை, திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துகிறது" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரூரில் வருமான வரித் துறை அதிகாரிகள் மற்றும் செந்தில்பாலாஜி விசுவாசிகள் என இரு தரப்பினரின் மீதும் வழக்கு தொடுத்திருப்பதாக சொல்லப்படுவது வியப்பை அளிக்கிறது. மேலும், முன்னரே தகவல் சொல்லாது சென்றால் இப்படிதான் நடக்கும் என திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருப்பது கேலிக்கூத்து.
சோதனைக்கு செல்லும் வருமானவரித் துறை அதிகாரிகளுக்கே, வாகனங்களில் ஏறும்போதுதான் எங்கு சோதனையிட போகிறார்கள் என்று தெரியும். அப்படி இருக்கையில், காவல் துறைக்கு எங்கு சோதனை நடக்கப்போகிறது என்ற தகவலை முன்னரே சொல்ல வேண்டும் என பொது அறிவுள்ளவர்கள் கேட்க மாட்டார்கள்.
மேலும், வருமானவரித் துறையினர் எங்கு வேண்டுமானாலும் அறிவிப்பு இல்லாமல் சோதனையிடுவதற்கு அதிகாரம் உள்ளது என்பதை சட்டம் தெரிந்தவர்கள் மறுக்கமாட்டார்கள். அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தால் அதற்கான விளைவுகளுக்கு தொடர்புடையவர்கள் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படாதது தமிழக அரசின், காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையை, மெத்தனப் போக்கை, திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துகிறது.
மத்திய அரசின் ஊழியர்களை தாக்குவது, கொலை மிரட்டல் விடுப்பது, பணி செய்யவிடாமல் தடுப்பது போன்ற குற்றங்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்தாலும், மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பதை தொடர்புள்ளவர்கள் உணர வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு, அவரது நிறுவனம் மட்டும் அவருக்குச் சொந்தமான இடங்களில் நேற்று (மே 26) காலை வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொள்ள வந்தபோது பரபரப்பு ஏற்பட்டது. வருமான வரித் துறையினருடன் வாக்குவாதம் செய்து, அவர்கள் வந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் ரெய்டு நடந்த இடமே போர்க்களமானது.
அண்ணாமலையுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்” - சவாலை ஏற்ற அமைச்சர் பொன்முடி..
விழுப்புரம்:
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் மும்மொழிக் கொள்கை குறித்து விவாதிக்க தயார் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் இன்று விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில துணை பொதுச் செயலாளரான உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: "பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துகளுக்கு, நான் பதிலளிக்கவேண்டிய பொறுப்பும், கடமையும் எனக்கு இருக்கிறது. நேரடியாக விவாதிக்க தயார் என்று சொல்லியிருக்கிறார். நானும் தயார் என்று ஏற்கெனவே அறிவித்திருக்கிறேன்
சென்னையில் எந்த இடத்தில், எந்த பொதுக் கூட்டத்தில் அவர் எந்த இடத்தில் பேசுவதற்கு தயார் என்கிறாரோ, அந்த இடத்துக்கு நான் தயார். மும்மொழிக் கொள்கை, தமிழ் வளர்ச்சிக்கு யார் காரணம். தமிழை பொறுத்தவரையில் இருமொழிக்கொள்கை எந்தளவிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் பற்றி நான் பேச தயாராக இருக்கிறேன். அண்ணாமலைக்கு வரலாறும் தெரியாது, நடக்கிற நிகழ்ச்சியும் தெரியாது. அரசாங்கத்திற்கு தெரியாமலா இது நடந்தவிட்டது என்கிறார். உயர்கல்வித் துறையில், பல்கலைக்கழகங்களில் அரசாங்கத்திற்கு தெரியாமல் என்னெ்னவோ நடக்கிறது. ஓர் உதாரணத்துக்குச் சொல்கிறன்.
வேந்தராக உள்ள ஆளுநர் ஊட்டியில் துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். அவர்களை அழைத்து இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையை பற்றி பேசுவதற்காக ஜூன் 5-ம் தேதி கூட்டம் நடைபெறும் என்று துணைவேந்தர்களுக்கெல்லாம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். நான் இணைவேந்தர். எனக்கே அது தெரியாது. அது அண்ணாமலைக்கு தெரிந்துள்ளது. ஆளுநருடன் நெருக்கமாக இருக்கிறார். ஆளுநரும் அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆளுநர் இந்தக் கூட்டத்தை கூட்டியது செயலாளருக்கும் தெரியாது. அமைச்சரான எனக்கும் தெரியாது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் கல்விக் கொள்கையை வகுப்பதற்காக ஒரு குழுவை நியமித்தார். அதனுடைய அறிக்கை வரவிருக்கிறபோது இந்தக் காலக்கட்டத்தில் துணைவேந்தர்களை எல்லாம் அழைத்து புதிய கல்விக் கொள்கை குறித்து விளக்கம் கொடுப்பதற்கு ஒரு வேந்தருக்கு என்ன உரிமை இருக்கிறது? தமிழக அரசை கலந்தாலோசிக்காமல், அவர்களுடைய கொள்கைக்கு எதிராக செய்ய முற்படுவது யார்? இதுவெல்லாம் அண்ணாமலைக்கு தெரியாதா? அண்ணாமலை தமிழ் வளர்ச்சி, கல்வி மீது அக்கறை உள்ளவராக இருந்தால், ஆளுநரை சந்தித்து இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டும். ஏன் அரசுக்கு தெரியாமல் இந்த துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்துகிறீர்கள் என்றெல்லாம் கேட்பார் என்று நம்புகிறேன்.
எந்த மொழிக்கும் நாங்கள் எதிர்ப்பானவர்கள் அல்ல. மும்மொழிக் கொள்கையை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறுகிறோம். புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம், இந்தி படித்தால் ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். தமிழுக்கு எந்தச் சலுகைகளும், முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. அதையெல்லாம் கொடுக்கதான் தமிழகத்தில் முதலமைச்சர் ஒரு கல்விக் கொள்கையை உருவாக்க குழுவை நியமித்தார்.
இவர்களுடைய நோக்கமெல்லாம் இந்தியைப் புகுத்த வேண்டும். அந்தக் காலத்திலிருந்து இந்தி எதிர்ப்புக்காக போராடிய மாநிலம் தமிழ்நாடு. ஏன்... தமிழ்நாடு என்று பெயர்வைத்ததே திமுக ஆட்சியில்தான். அண்ணாமலை இன்னும் வரலாற்றையும் படிக்க வேண்டும். அரசியலையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
விவாதிக்கலாம் வாருங்கள்:
Tamil cinema & Indian cinema
உயிர் பயத்தில் ராணுவத்தில் இருந்து ஊருக்குத் திரும்பும் அனூப் (டோவினோ தாமஸ்), டீச்சர் மஞ்சுவைக் (தன்வி ராம்) காதலிக்கிறார். கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்கிறார்கள் மத்தானும் (லால்), அவர் மகன் வின்ஸ்டனும் (நரேன்).
அந்தத் தொழிலை வெறுத்து மாடலிங் ஆசையில் இருக்கிறார் இன்னொரு மகன் நிக் ஷன் (ஆசிப் அலி). குடும்பத்தை விட்டு மக்களைக் காக்கும் அரசு பணியில் இருக்கிறார் ஷாஜி (குஞ்சாக்கோ போபன்), தமிழ்நாட்டில் இருந்து வரும் லாரி டிரைவர் சேதுபதி (கலையரசன்), சேனல் செய்தியாளர் நூரா (அபர்ணா பாலமுரளி), வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் கோஷி (அஜு வர்க்கீஸ்).. இவர்களும் இன்னும் சில முரண்பட்ட கேரக்டர்களும் கேரளாவைப் புரட்டிப் போட்ட பேய் மழை நாட்களில், எப்படி ஒன்று கூடி எதிர்பாராத ஹீரோக்களானார்கள் என்பதுதான் கதை.
மலையாளத்தில் வெற்றிபெற்ற படத்தை தமிழ் உள்ளிட்ட மொழிகளில், டப் செய்து இப்போது வெளியிட்டிருக்கிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் கேரளாவை உலுக்கி எடுத்தது பேய் மழை. அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளத்தில் தத்தளித்தது மாநிலம். நிலச்சரிவு, உயிரிழப்புகள், இடப்பெயர்வு என கொடும் நிகழ்வு அது.
அந்த நிஜ சம்பவத்துக்கு உயிரும் உணர்வும் கொடுத்து எமோஷனலான ஒரு படத்தை, இப்படி தந்ததற்காகவே, இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் உள்ளிட்ட படக்குழுவைப் பாராட்டலாம்.
கொஞ்சம் தடுமாறி இருந்தாலும் ஆவணப்படமாகிவிடும் ஆபத்து நிறைந்த திரைக்கதையை கையாண்ட விதம் அபாரம். படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்.
ஒவ்வொருவருக்கும் உயிரோட்டமான கதையைக் கொடுத்து, கடைசிவரை அதைச் சரியாக இணைத்திருக்கும் அழகான திரை எழுத்து படத்தின் கூடுதல் பலம். முதல் பாதி கொஞ்சம் குழப்பத்தைத் தந்தாலும் இரண்டாம் பாதிக் கதையின் வெள்ளத்தில், நாமும் சுகமாக மூழ்கிவிடுகிறோம்.
மகனுக்குப் பெண் கேட்டுச் சென்ற மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த லாலை, ஏளனமாகப் பேசுகிறார் ஒரு குடும்பத் தலைவர். அவர் வீட்டை வெள்ளம் சூழ்ந்து உயிருக்குத் தவிக்கும்போது படகில் வந்து மீட்கும் லாலை நோக்கி அவர் கைகூப்பும் இடம், ராணுவத்தில் இருந்து ஓடி வந்ததால் ஊரே ஏளனமாகப் பேச, வெள்ள நிகழ்வில் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் உயிரைக் காப்பாற்றப் போராடும் டோவினோவுக்கு கிடைக்கும் மரியாதை, கணவனைப் பிரியும் நிலையில் இருக்கும் மனைவி, பிறகு அன்பு செலுத்த தொடங்கும் இடம் என ஒவ்வொரு காட்சியும் மனதைத் தொடுகிறது.
அனைத்து கேரக்டருக்கும் சிறப்பான நடிகர்களைத் தேர்வு செய்திருப்பதும் தேர்ந்த நடிப்பை அவர்கள் வழங்கியிருப்பதும் அழகு. நிஜ காட்சிகளையும் செட் அமைத்து உருவாக்கியவற்றையும் ஒன்றிணைத்து படமாக்கி இருக்கும் விதம், வியப்பு.
எது நிஜம், எது அரங்கம் என பிரித்தறிய முடியாத காட்சி அனுபவங்களுக்குப் பின்னுள்ள ஸ்பெஷல் எபெக்ட்ஸ் கலைஞர்கள், படம் முடிந்த பின்னும் காதில் ஒலிக்கும் மழை சத்தத்தைக் கொண்டு வந்தசவுண்ட் இன்ஜீனியர், நோபின் பால், வில்லியம் பிரான்சிஸின் இசை, கதைக்குள் இழுத்துப்பிடித்து அமர வைக்கும் அகில் ஜார்ஜின் நேர்த்தியான ஒளிப்பதிவு என ஒவ்வொருவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.
துண்டு துண்டாக வரும் முதல் பாதி, திரும்பத் திரும்ப நடக்கும் மீட்புக் காட்சிகள் கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும் குறைகள் தாண்டி கொண்டாடப்பட வேண்டிய படம் இது.
புதிய நாடாளுமன்றம் டெல்லில இருக்கு.. அதுக்கு உள்ள இந்தியாவே இருக்கு! எந்த பொருள் எந்த மாநிலம்?
டெல்லி:
பிரதமர் நரேந்திர மோடியால் இன்று திறந்து வைக்கப்படும் புதிய நாடாளுமன்றம் டெல்லியில் இருந்தாலும், கட்டமைக்க இந்தியா முழுவதிலும் இருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது அதை மேலும் சிறப்பாக்குகிறது.
New parliament building constructed by products brought from various states of India
ஔரங்காபாத் அசோகர் சிங்க சின்னம்:
இந்திய தேசியக் கொடியின் மத்தியில் இருக்கும் அசோக சக்கர சின்னம், அசோகர் சிங்க சின்னத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த அசோகர் சிங்க சின்னம் நாடாளுமன்ற வெளிப்புறத்தை அலங்கரிக்கிறது. இதனை தயாரிப்பதற்கான பொருட்கள் மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத் மற்றும் ஜெய்பூரில் பெறப்பட்டன. நாடாளுமன்ற வெளிப்புற அமைப்பின் பணிகள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் செய்யப்பட்டது.
மும்பை மேஜைகள்: புதிய நாடாளுமன்றத்தில் லோக் சபா மற்றும் ராஜ்ஜிய சபா அரங்குகளுக்கான மேற்கூரைகளுக்கு பயன்படுத்தப்பட்ட எஃகு டாமன் & டையூவில் இருந்து சேகரிக்கப்பட்டு உள்ளது. குஜராத்தின் அஹமதாபாத்தில் பித்தளை வேலைகள் நடைபெற்று உள்ளன. உறுப்பினர்கள் பயன்படுத்தும் மேஜைகளும் இருக்கைகளும், அலுவலக பொருட்களும் மும்பையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. கட்டிடத்தின் தரைக்கு மிர்சாபூர் கம்பளம் விரிக்கப்பட்டு இருக்கிறது.
Comments
Post a Comment