Skip to main content

FEATURED POSTS

How to Start Affiliate Marketing with No Money Step-by-Step in 2024

Today news Updates

 Today news Updates

       உங்கள் சம்பளத்தை    

சரியாக நிர்வகிக்கச் சொல்லித்தரும் நியூஸ்லெட்டர்.


  எதிர்காலத் தேவைகளுக்காக அதிகம் சேமிப்பதாக நினைத்து, நம்மில் பலர் அடிக்கடி சில தவறுகளைச் செய்கிறோம். அப்படி அன்றாட வாழ்வில் செய்யும் தவறுகள் என்னென்ன, அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து இன்றைய The Salary Account எடிஷனில் வழிகாட்டுகிறார் வீரா ஃபின்சர்வ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஏ.எஸ்.முரளிதரன்.


1. மலிவு விலை ஷாப்பிங்

விலை மலிவாகக் கிடைக்கிறது என்றே ஒரே காரணத்திற்காக, காய்கறி, மளிகை உட்பட வீட்டிற்கான அத்தியாவசிய பொருள்களைப் பலரும் மொத்தமாக வாங்கிவிடுகிறார்கள். இப்படி வாங்கிய காய்கறி, பழங்கள் போன்றவற்றை ஃபிரிட்ஜில் அடைத்து வைக்கிறார்கள். இதனால் மின்சார செலவு அதிகரிப்பதுடன் அவை விரைவில் கெட்டுப் போகவும் செய்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அத்தியாவசிய பொருள்களைத் தேவைக்கு மட்டும் வாங்கிக் கொள்வது நல்லது. உதாரணமாக, ஒரு கிலோ கத்தரிக்காய் ₹50. மூன்று கிலோ வாங்கினால் ₹120 எனில், நம்மவர்கள் மூன்று கிலோ வாங்கிவிடுகிறார்கள். நாம் இரண்டு கிலோ அளவுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் எனில், இரண்டு கிலோவை ₹100-க்கு வாங்கிக் கொள்ளலாம். கூடுதலாக ஒரு கிலோ கிடைக்கிறது என்பதற்காக அதை வாங்கிப் பயன்படுத்தாமல் 20 ரூபாயை இழக்கிறோம். மலிவு விலையில் கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற பருப்பை வாங்கி வந்து, அதைப் பயன்படுத்த முடியாமல் சிலர் வீசி எறிவதையும் பார்க்கலாம்.

ஆக, மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காகத் தரமற்ற பொருள்களை வாங்குவதால், நாம் பணத்தைச் சேர்ப்பதில்லை. செலவைக் கூட்டி உடல்நலனையும் கெடுத்துக்கொள்கிறோம். இந்த மாதிரியான பொருள்களில் எவற்றை, எந்த அளவுக்கு வாங்க வேண்டும் என்று யோசித்துச் செயல்பட வேண்டும்.


2. பராமரிப்பு செலவு:

வீட்டிலுள்ள வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற பொருள்களின் பராமரிப்பு செலவைத் தவிர்ப்பதால், பணத்தைச் சேமிக்க முடியும் எனப் பலரும் நினைக்கிறார்கள். சில நூறு ரூபாய்களை மிச்சப்படுத்த நினைத்து, அன்றாடம் பயன்படுத்தும் இது மாதிரியான பொருள்களை சரியாகப் பராமரிக்கவில்லை எனில், விரைவிலேயே பழுதாகிவிடும். விளைவு, அந்தப் பொருள்களை சீர்செய்ய மிச்சம் செய்ய நினைத்த பணத்தைவிட அதிகமாகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். அல்லது புதிய பொருளை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பைக்கை மெக்கானிக்கிடம் தந்து சரிபார்ப்பது, வீட்டில் சுவர்களுக்கு ஆறு வருடத்துக்கு ஒரு முறையாவது பெயின்ட் அடிப்பது என அவசியம் செய்ய வேண்டிய அத்தியாவசியமான செலவுகளைச் செய்வதால் நமக்கு லாபமே கிடைக்கும்.


3. மருத்துவச் செலவுகள்:

உடல்நலம் பாதிக்கும்போது மருத்துவரிடம் சென்றால், ஃபீஸ் தர வேண்டும் என்பதற்காக மெடிக்கல் ஷாப்பில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடுகிறார்கள். தொடர்ச்சியான தலைவலி, காய்ச்சல் எனில், பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மருத்துவரை உடனடியாகத் தேடிச் சென்று வைத்தியம் பார்த்துக்கொள்வதே சரியாக இருக்கும். சரியாகக் கவனிக்கப்படாத நோய் அறிகுறிகள் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அதிக செலவையும் ஏற்படுத்தி விடும். நம் உயிருக்கேகூட ஆபத்து வர வாய்ப்புண்டு. எனவே, உடல்நலக் குறைவு எனில், பணம் செலவாகுமே என்று நினைக்காமல், சரியான நேரத்தில் சிகிச்சை எடுப்பது அவசியம்.


4. மலிவு விலையில் தரமில்லாத பொருள்களை வாங்குவது:

பணத்தை மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி என்று தரமில்லாத பொருள்களை வாங்குவதை பலர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, ஒரு மிக்ஸி ₹5,000 ஆகும் எனில், ₹3,000-க்கு தரம் இல்லாத மிக்ஸியை வாங்குவது. அன்றாடம் பயன்படுத்தும் இது மாதிரியான பொருள்கள் மலிவு விலையில் வாங்கும்போது விரைவில் பழுதடைவதற்கு நிறைய வாய்ப்புண்டு. அப்படிப் பழுதடைந்தால், தேவையில்லாத கூடுதல் செலவுகள் ஏற்படும். அத்துடன் தரமற்ற பொருட்களால் உடலுக்கும் உடைமைக்கும் ஏன் உயிருக்குமே கூட ஆபத்துகள் வரலாம். எனவே, தரமான பொருள்களை வாங்கி, நீண்ட காலத்துக்குப் பயன்படுத்துவது மூலம் மட்டும்தான் கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும்.


5. அதிகம் தேவைப்படாத பொருளை விலை கொடுத்து வாங்குவது:

கார் வாடகை பணத்தை மிச்சப்படுத்த நினைத்து பலரும் சொந்தமாக கார் வாங்கிவிடுகிறார்கள். ‘கார் வாடகைக்கே இவ்வளவு பணம் செலவாகிறதே! அதற்கு நாமே சொந்தமாக கார் வாங்கிவிடலாமே’ என்பது அவர்கள் போடும் கணக்கு. ஆனால், பல சமயங்களில் இந்தக் கணக்கு உண்மையில் நடப்பதில்லை. அடிக்கடி காரில் வெளியே செல்லலாம் என்று கார் வாங்குபவர்கள், பிற்பாடு பெட்ரோல் செலவுக்கு பயந்து, காரை வெளியே எடுத்துச் செல்லத் தயங்குகிறார்கள்.

பணம் கொடுத்து வாங்கிய கார் இப்படி பல நாள் வீட்டிலேயே நிற்கும்போது, அதன் செயலாற்றலும் குறைகிறது. பலரும் இ.எம்.ஐ-யில் காரை வாங்கிவிடுவதால், கஷ்டப்பட்டு வட்டி கட்டும் அதே நேரத்தில், காரின் தேய்மானமும் அதிகரிக்கிறது. தவிர, கார் பார்க்கிங் செலவு, இன்ஷூரன்ஸ் பிரீமியம், சர்வீஸ் செலவு என ஏகப்பட்ட செலவுகள் ஆவதைப் பார்த்து, கார் விஷயத்தில் தவறு செய்து விட்டோமோ என்று யோசிக்கத் தொடங்குகிறார்கள். வாகனத்தை அடிக்கடி பயன்படுத்த மாட்டீர்கள் எனில், சொந்தமாக வாகனம் வாங்குவதால், எந்தப் பயனும் இல்லை!


6. காப்பீடுகளை தவிர்ப்பது

காப்பீட்டுத் திட்டங்களுக்குக் கட்டும் பணம் வீண் எனப் பலரும் நினைத்து ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளை எடுக்காமல் இருக்கிறார்கள். ‘என் நண்பர் 10 வருஷமா மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கிட்டு வர்றாரு. ஆனா, இதுவரை அவரு ஒருமுறைகூட ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனதில்லை. அதனால அது வேஸ்ட்தான்’ என்று நினைத்து, மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்காமலே இருக்கிறார்கள். ஆனால், நண்பருக்கு வராத அந்தச் செலவு தனக்கு வந்து, கடன் வாங்கி மருத்துவமனை செலவு செய்யும்போதுதான், அடடா, தப்பு செய்துவிட்டோமே, மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுத்திருந்தால், இந்த செலவை எளிதாகத் தவிர்த்திருக்கலாமே என்று நினைக்கிறார்கள். காப்பீட்டுத் தொகையில் சில ஆயிரங்களை மிச்சப்படுத்த நினைத்து, பல ஆயிரங்களைச் செலவு செய்வதைவிட, பணத்தை மிச்சப்படுத்த நினைக்காமல், மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுப்பதே புத்திசாலித்தனம்.

பணத்தை மிச்சப்படுத்த நினைப்பது சரியான சிந்தனைதான். ஆனால், எந்தச் செலவை நாம் செய்ய வேண்டுமோ, அந்தச் செலவை செய்யவில்லை எனில், நஷ்டமே ஏற்படும்! மேலும்... 



















ஆளுநருடன் எடப்பாடி சந்திப்பு... புகைச்சலில் அதிமுக சீனியர்ஸ்...



தமிழகத்தில் போதைப்பொருள்கள் புழக்கம், சட்டம் - ஒழங்கு பிரச்னை, கள்ளச்சாராய மரணங்கள், திமுக அமைச்சர்களின் முறைகேடு உள்ளிட்டவை தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகாரளிக்க அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கிண்டியில் பேரணி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து, பலநூறு பக்கங்கள்கொண்ட அறிக்கையை வழங்கினார் எடப்பாடி. இந்தச் சந்திப்பின்போது, எடப்பாடியுடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், பெஞ்சமின், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டச் செயலாளர் பாலகங்கா ஆகியோர் உடன் இருந்தனர். குறிப்பாக, ஆளுநரைச் சந்திக்க சீனியர்களை அழைத்துச் செல்லாதது சிலரை அப்செட்டில் ஆழ்த்திருப்பதாகக் கூறப்படுகிறது.


ஆளுநருடனான சந்திப்பில், சீனியர்களை எடப்பாடி ஓரங்கட்டிவிட்டார் என்ற புதுப் புகைச்சல் அ.தி.மு.க-வில் ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து அ.தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``ஆளுநரை நேரில் சந்திக்க எடப்பாடியையும் சேர்த்து 10 பேருக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, அமைப்புச் செயலாளர் என்ற முறையில் பெஞ்சமின், பாலகங்கா ஆகியோரை அழைத்துச் சென்றிருக்கிறார் எடப்பாடி. அதில் தவறில்லை. ஆனால், சீனியர்களான தம்பிதுரை, செல்லூர் ராஜூ, கோகுல இந்திரா, செம்மலை, பொன்னையன், வளர்மதி ஆகியோரை உடன் அழைத்துச் செல்லாததால், அவர்கள் அப்செட்டாகிவிட்டார்கள்.

 குறிப்பாக எம்.பி தம்பிதுரை, டெல்லியுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார். அவரை ஆளுநர் சந்திப்பில் அழைத்துச் சென்றிருந்தால், அவரும் சில கருத்துகளை முன்வைத்திருப்பார். அவரை எடப்பாடி கழற்றிவிட்டுவிடுவார் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக செல்லூர் ராஜூ தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதை ஆளுநர் மாளிகையிலேயே வெளிப்படுத்திவிட்டாராம். அதேபோலதான், பொன்னையன், செம்மலை ஆகியோர் கடுகடுவெனவே இருந்தனர்.
பெண் என்ற அடிப்படையில் கோகுல இந்திரா அல்லது வளர்மதி ஆகியோரில் ஒருவரையாவது அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இரண்டு பேரையும் எடப்பாடி கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, ஓ.பி.எஸ்-ஸுக்கு மாற்றாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட எல்லா வகையிலும் ஆர்.பி.உதயகுமாரை முன்னிறுத்திவந்த எடப்பாடி, சமீபத்தில் அவரை ஓரங்கட்டுகிறாரோ என்ற எண்ணம் மேலோங்குகிறது. கடந்த முறையும் ஆளுநருடான சந்திப்பில் அவரை அழைத்துச் செல்லவில்லை. இந்த முறையும் அழைத்துச் செல்லவில்லை. இதனால், அவர் எங்குமே தனது முகத்தை காட்டாமல் அமைதியாகிவிட்டார். இதற்கிடையே, காமராஜ், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தன்னை நிச்சயம் எடப்பாடி அழைத்துச் செல்வார் என்று எண்ணியிருந்தார்கள்போலும். அவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது"




Comments