Skip to main content

FEATURED POSTS

How to Start Affiliate Marketing with No Money Step-by-Step in 2024

சமீபத்திய நிகழ்வுகள் today updates

Tamil Tech

 சமீபத்திய நிகழ்வுகள்..


















© மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.


 

© தமிழக நிகழ்வுகள் சில 

உங்கள் பார்வைக்கு.....




 

© யூடியூப் லேட்டஸ்ட் ஆல்பம் சாங்ஸ்..

Youtube latest tamil songs for ladies voice mass hitsongs.. 

 

 

 # Youtube Album song in tamil most of boys girls and lovers like to more and love this song for all ages. 


 # Stephen Album song hits..

 

என்றும் மக்களின் நினைவில் இருந்து ரசிக்க வைக்கும் நாட்டுப்புற பாடல்.. 

டான்ஸ் னா இப்படி இருக்கனும்..

 

வட்ட பொட்டுகாரி டான்ஸ் வேற லெவல்...

 

இன்றைய அரசியல் சம்பந்தமான நிகழ்வுகள்...


1. மீண்டும் வரும் IT Ride Sabareesan இந்தியாவிற்குள் நுழைய முடியாது சிக்கிய ரூ.17,000 கோடி 

2. மலேசியாவில் திண்டுகல் லியோனியை ஓட ஓட துரத்திய மலேசிய தமிழர்கள் அதிர்ச்சி வீடியோ காட்டு தீ போல வைரல்

3. நடிகை பாத்திமா பாபுவுடன் ஸ்டாலின் இருந்த புகைப்படத்தை வெளியிட்ட நபரை கைது செய்த தமிழக அரசு.

4. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஒரிஜினல் ஆடியோவும் உள்ளது- அண்ணாமலை பரபரப்பு பேட்டி

தமிழ்நாடு:


சென்னை:

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஒரிஜினல் ஆடியோவும் உள்ளது- அண்ணாமலை பரபரப்பு பேட்டி..

கலைஞர் டி.வி.யில் கனிமொழி பங்குதாரர் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.
வழக்கு கோர்ட்டுக்கு வரட்டும். கோர்ட்டில் சொல்வதற்கு இன்னும் பல விஷயங்கள் உள்ளன.

5. சென்னை:
சென்னை நடுக்குப்பத்தில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான மன நிலையை வாக்குகளாக மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க.வும் உள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளை கைப்பற்றுவதுதான் எங்கள் இலக்கு.


தி.மு.க.வினர் மீது நான் சொத்துப் பட்டியல் வெளியிட்டதற்காக கனிமொழி எம்.பி. நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் அவர் கலைஞர் தொலைக்காட்சியில் தான் பங்குதாரர் இல்லை என்று குறிப்பிடவில்லை. சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்ததாகவும், அதன்பிறகு பங்குகளை விற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது அவர் பங்குதாரராக இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். பங்குகளை விற்றிருந்தால் அந்த பணம் எங்கே போனது? ஒவ்வொருவரின் சொத்து மதிப்புதான் எனது குற்றச்சாட்டு.

நிதிஅமைச்சர் பழனி வேல் தியாகராஜனின் ஆடியோ என்பது அவர் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம். இந்த விஷயத்தில் அவர் குற்றவாளி இல்லை. என்ன நடக்கிறது என்பதைத்தான் தெரிவித்து இருக்கிறார். வழக்கு கோர்ட்டுக்கு போகும்போது அவர் பேசிய ஒரிஜினல் ஆடியோவையும், எங்கே, எப்போது, யாரிடம் பேசப்பட்டது என்பதையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

கட்சியின் தலைவர் பதவியில் இருக்கும் எனக்கு, எனக்கான பாதையை அமித்ஷா, நட்டா ஆகியோர் ஏற்கனவே வகுத்து தந்துவிட்டார்கள். இப்படித்தான் நீங்கள் செயல்பட வேண்டும் என்று அவர்கள் கொடுத்த அறிவுரைகளை ஏற்பது தான் எனது வேலை.

மெட்ரோ ரெயில் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. யிடம் நான் புகார் கொடுத்து உள்ளேன். ஜி ஸ்கொயர் சோதனைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த நிறுவனம் பற்றி நான் புகார் அளிக்கவும் இல்லை. 6 நாட்கள் சோதனை நடந்ததில் இருந்து ஏதோ பெரிய விஷயம் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.2010 கோடி சொத்து மதிப்பு என்று நான் தெரிவித்ததை அவர் இல்லை என்று மறுத்து உள்ளார். ஒருவேளை நமது சொத்து மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடியாச்சே. ரூ.2000 கோடி என்று குறைத்து சொல்லிவிட்டாரே என்று வருத்தப்படுகிறாரோ என்னவோ? வழக்கு கோர்ட்டுக்கு வரட்டும். கோர்ட்டில் சொல்வதற்கு இன்னும் பல விஷயங்கள் உள்ளன. 

நான் சொத்து மதிப்புகளை வங்கி ஸ்டேட்மெண்டுடன் வெளியிட்டுவிட்டேன். தி.மு.க.வினர் குறைந்தபட்சம் ஒருமாத ஸ்டேட்மெண்டை வெளியிட்டுவிட்டு பேசட்டும் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

6. 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் 1000 பேருக்கு மீன் சாப்பாடு விருந்து- அண்ணாமலையும் பொதுமக்களுடன் சாப்பிட்டார் மெரினா நடுக்குப்பத்தில் பிரதமரின் நிகழ்ச்சியை பொதுமக்கள் நேரில் கண்டுகளிக்க பிரமாண்ட பந்தல் போடப்பட்டு எல்.இ.டி. திரையும் அமைக்கப்பட்டிருந்தது. பா.ஜனதாவை சேர்ந்த பெண்கள் அதிகாலையிலேயே சமையலில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை பா.ஜனதாவினர் இன்று திருவிழா போல் கொண்டாடினார்கள். சென்னை மெரினா நடுக்குப்பத்தில் பிரதமரின் நிகழ்ச்சியை பொதுமக்கள் நேரில் கண்டுகளிக்க பிரமாண்ட பந்தல் போடப்பட்டு எல்.இ.டி. திரையும் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் மீன் சாப்பாடு விருந்து அளிக்கப்பட்டது. இதற்காக பா.ஜனதாவை சேர்ந்த பெண்கள் அதிகாலையிலேயே சமையலில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் சதீஷ்குமார் என்பவர் மனைவி சுபசித்ரா. இவரும் கட்சி பொறுப்பில் இருக்கிறார். தனியார் பள்ளியில் ஆசிரியை வேலைபார்த்த சுபசித்ரா கட்சி ஈடுபாடு காரணமாக கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வேலையை ராஜினாமா செய்தார். தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. இதையும் படியுங்கள்: மாமல்லபுரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை தூளாக்கும் நவீன மிஷின்- சுற்றுலா பயணிகள் வரவேற்பு அதன்பிறகு மீன் உணவகம் என்ற பெயரில் சிறிய உணவகத்தை தொடங்கினார். அதுவும் கொரோனாவுடன் மூடப்பட்டது. வாழ்க்கையோடு போராடினாலும் கட்சிக்காகவும் போராடும் இந்த தம்பதி இன்று விருந்துக்கும் சமையல்காரர்கள் யாரையும் அழைக்கவில்லை. 25-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து சமையலில் ஈடுபட்டார்கள். மீன்களை கழுவி சுத்தப்படுத்துதல், உணவு தயாரித்தல் என்று உணவு கூடமே பெண்கள் கைவண்ணத்தில் களை கட்டியது. மீன் விருந்து பற்றி சுபசித்ரா கூறியதாவது:- தாமரை சொந்தங்களுக்கு என் கையினால் சமைத்து விருந்து கொடுக்க ஆசை. எனவே சமையல்காரர்களை அழைக்கவில்லை. நாங்களே செய்கிறோம். நண்டு சூப், இறால் தொக்கு, வஞ்சிரம் வறுவல், பாறை மீன் குழம்பு தயார் செய்துள்ளோம் என்றார். விருந்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, சுதாகர் ரெட்டி, நடிகை நமீதா, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கரு.நாகராஜன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகளும் பொதுமக்களுடன் அமர்ந்து விருந்தை ருசித்து சாப்பிட்டனர். சூப், வறுவல், தொக்கு எல்லாவற்றையும் ரசித்து சாப்பிட்டனர். சுமார் 1000 பேருக்கு விருந்து வழங்கப்பட்டது.

Comments