News18 India
Latest News
500 சப்ஸ்கிரைபர்கள் போதும்... யூடியூப் மூலம் பணம் சம்பாதிக்க புது ரூல்!
யூடியூப் நிறுவனம் யூடியூப் சேனல்களுக்கான மானிடைஷேசன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகளை மாற்றியிருக்கிறது. இந்த பாலிசிகள் மூலம் 500 சப்ஸ்கிரைபர்கள் கொண்ட யூடியூப் சேனல்கள் கூட பணம் சம்பாதிக்க முடியும்.
கேட்பதை எல்லாம் கொடுக்கும் ஒரு செயலி தான் யூ-டியூப். குண்டுசி முதல் விமானம் வரை தயாரிப்பது எப்படி? உணவு வகைகள், மருந்து வகைகள் உட்கொள்வது எப்படி? செய்வது எப்படி என யூ-டியூபில் கிடைக்காத தகவல்களே இல்லை எனலாம். அதனால் தான் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப் ஆப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 45 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப் பயன்படுத்துகிறார்கள்.1/ 6
கேட்பதை எல்லாம் கொடுக்கும் ஒரு செயலி தான் யூ-டியூப். குண்டுசி முதல் விமானம் வரை தயாரிப்பது எப்படி? உணவு வகைகள், மருந்து வகைகள் உட்கொள்வது எப்படி? செய்வது எப்படி என யூ-டியூபில் கிடைக்காத தகவல்களே இல்லை எனலாம். அதனால் தான் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப் ஆப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 45 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப் பயன்படுத்துகிறார்கள்.
ஒருகாலத்தில் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த யூடியூப், இப்போது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான யூடியூபர்களுக்கு மாத வருமானம் தரும் தளமாக மாறியிருக்கிறது. ஒரு யூடியூப் சேனல் மூலம் யார் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்க முடியும். திறமை இருந்தால் போதும், முதலீடு தேவையில்லை. தங்களிடம் இருக்கும் இசை, பாட்டு, சமையல்கலை, பலகுரல் போன்ற திறமைகளை வைத்து பல யூடியூபர்கள், மாதம் பல லட்சம் ரூபாய்களை வருவாயாக ஈட்டிவருகிறார்கள். சினிமா பிரபலங்களுக்கு இணையாக யூடியூப் பிரலங்களும் செலிபிரிட்டி ஆகி வருகிறார்கள்.2/ 6
ஒருகாலத்தில் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த யூடியூப், இப்போது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான யூடியூபர்களுக்கு மாத வருமானம் தரும் தளமாக மாறியிருக்கிறது. ஒரு யூடியூப் சேனல் மூலம் யார் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்க முடியும். திறமை இருந்தால் போதும், முதலீடு தேவையில்லை. தங்களிடம் இருக்கும் இசை, பாட்டு, சமையல்கலை, பலகுரல் போன்ற திறமைகளை வைத்து பல யூடியூபர்கள், மாதம் பல லட்சம் ரூபாய்களை வருவாயாக ஈட்டிவருகிறார்கள். சினிமா பிரபலங்களுக்கு இணையாக யூடியூப் பிரலங்களும் செலிபிரிட்டி ஆகி வருகிறார்கள்.
ஆனால், இவ்வாறு பணமும் புகழும் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. யூடியூப் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், முதலில் நீங்கள் பதிவிடும் வீடியோக்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற வேண்டும்.
உங்களது சேனலின் சப்ஸ்கிரைபர்கள் அதிகமாக இருக்க வேண்டும். அதோடு, உங்கள் வீடியோக்களை லட்சக்கணக்கான மக்கள் பார்க்க வேண்டும்.
இப்படி பல்வேறு மானிடைசேசன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகளை, யூடியூப் நிறுவனம் வைத்துள்ளது.
3/ 6 ஆனால், இவ்வாறு பணமும் புகழும் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. யூடியூப் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், முதலில் நீங்கள் பதிவிடும் வீடியோக்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற வேண்டும். உங்களது சேனலின் சப்ஸ்கிரைபர்கள் அதிகமாக இருக்க வேண்டும். அதோடு, உங்கள் வீடியோக்களை லட்சக்கணக்கான மக்கள் பார்க்க வேண்டும். இப்படி பல்வேறு மானிடைசேசன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகளை, யூடியூப் நிறுவனம் வைத்துள்ளது.
அதாவது, ஒருவர் யூடியூப் சேனல் தொடங்கிய பின்பு, அந்த சேனல் குறைந்தது 1,000 சப்ஸ்கிரைபர்களை கொண்டிருக்க வேண்டும். ஒரு ஆண்டில், நீங்கள் பதிவிடும் வீடியோக்களை 4,000 மணி நேரம் பார்வையாளர்கள் பார்த்திருக்க வேண்டும் அல்லது 90 நாட்களுக்கு யூடியூப் ஷார்ட்ஸ்களின் வியூஸ் 10 மில்லியனை எட்டியிருக்க வேண்டும். இதையெல்லாம் உங்களது சேனல் செய்திருந்தால், அது மானிடைசேசன் செய்யப்படும். மாதம், மாதம் பணமும் கிடைக்கும்.4/ 6
அதாவது, ஒருவர் யூடியூப் சேனல் தொடங்கிய பின்பு, அந்த சேனல் குறைந்தது 1,000 சப்ஸ்கிரைபர்களை கொண்டிருக்க வேண்டும். ஒரு ஆண்டில், நீங்கள் பதிவிடும் வீடியோக்களை 4,000 மணி நேரம் பார்வையாளர்கள் பார்த்திருக்க வேண்டும் அல்லது 90 நாட்களுக்கு யூடியூப் ஷார்ட்ஸ்களின் வியூஸ் 10 மில்லியனை எட்டியிருக்க வேண்டும். இதையெல்லாம் உங்களது சேனல் செய்திருந்தால், அது மானிடைசேசன் செய்யப்படும். மாதம், மாதம் பணமும் கிடைக்கும்.
இந்த அளவீடுகள், இப்போது அதிரடியாக குறைக்கப்பட்டு புதிய யூடியூப் மானிடைசேசன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய யூடியூப் மானிடைசேசன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகளின்படி, யூடியூப் சேனலுக்கு 500 சப்ஸ்கிரைபர்கள் இருந்தாலே போதும். 90 நாட்களில் 3 வீடியோக்களை பதிவிட்டிருக்க வேண்டும். இந்த வீடியோக்களை 3,000 மணி நேரம் பார்வையாளர்கள் பார்த்திருக்க வேண்டும் அல்லது யூடியூப் ஷார்ட்ஸ்களின் வியூஸ் 3 மில்லியனை எட்டியிருக்க வேண்டும்.
இந்த அளவீடுகள் இருந்தாலே பணம் சம்பாதிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யூடியூபர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த விதிகள் முதலில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, தைவான் மற்றும் தென்கொரியாவில் அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.6/ 6
இந்த அளவீடுகள் இருந்தாலே பணம் சம்பாதிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யூடியூபர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த விதிகள் முதலில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, தைவான் மற்றும் தென்கொரியாவில் அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Comments
Post a Comment